Idly mavu: 10 நாள் கழிச்சும் முதல் நாள் சாப்பிடும் இட்லி போல்.... மாவு புளிக்காமல் இருக்க சிம்பிள் 5 டிப்ஸ்..!

By Anu Kan  |  First Published Mar 11, 2022, 7:46 AM IST

Idly mavu: இட்லி மாவு அரைப்பது எப்படி? ..இனி, இட்லி மாவு அரைக்கும் போது நாம் கவனமுடன் கையாளா வேண்டிய உதவி குறிப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை படித்து பயன் பெறுங்கள். 


இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காலை உணவாக பெரும்பாலும், எல்லோரின் வீட்டில் உண்பது  இட்லி ஆகும். எவ்வளவு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டாலும் சளைக்காமல், மீண்டும் மீண்டும் சாப்பிட கேட்கும் உணவாகும். வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் போதும், என்னதான் மாறி மாறி மேற்கத்திய உணவுகளை விரும்பி சாப்பிட்டாலும், ஒரு சில நாட்களுக்கு பிறகு அவை போர் அடித்து விடும். அடுத்து நாம் சாப்பிட விரும்பும் உணவு, நம்முடைய பாரம்பரிய உணவாகும். அவற்றில் முக்கிய பங்கு இந்த இட்லி,தோசைக்கு உண்டு. 

Latest Videos

undefined

இட்லி சாப்பிடும் போது அது பஞ்சு போன்று இருக்க வேண்டும். மாறாக கடினமாகவோ அல்லது பாதி மாவாகவே இருந்தால் இட்லி மீதுளள ஆர்வமே குறைந்துவிடும். இந்த நிலை வராமல் இருக்க, இட்லி மாவு அரைக்கும் போது நாம் கவனமுடன் கையாளா வேண்டிய உதவி குறிப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை படித்து பயன் பெறுங்கள். 

அரிசி மற்றும் உளுந்து மாவு சேர்ந்து அரைக்கும்போது பெரும்பாலும் மொத்தமாக அரைத்து வைத்துவிடும பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும்.  இப்படி, அரைத்து வைக்கும்போது அதிகபட்சமாக 3 நாட்கள் மாவு புளிக்காமல் இருக்கும். ஆனால் 4-வது நாளில் மாவு கட்டாயம் புளிப்புத்தன்மையை எட்டிவிடும். 

எனவே, இட்லி தோசை மாவு ஒரு வாரம் வரைக்கும் புளிக்க கூடாது என்றால் ஒரு சில டிப்ஸ்களை பயன்படுத்தலாம்.

டிப்ஸ் 1:

இட்லி தோசைக்கு மாவு அரைக்கும்போது அரிசியை 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதேபோல் உளுந்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்கூடாது. அதற்கு மேல் அரிசி,உளுந்து  ஊறினால் மாவு விரைவில் புளிப்புத்தன்மையை எட்டிவிடும். 

டிப்ஸ் 2:

மாவு அரைக்கும்போது வேறு எந்த வேலையும் செய்யாமல் மாவு அரைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், மாவு அரைக்கும்போது அதிக நேரம் அரைக்க கூடாது. இதில் மாவு அதிக நேரம் அரைந்தால் விரைவில் புளித்துவிடும்.
 
டிப்ஸ் 3 : 

அரிசி அரைப்பட்டவுடன் அதில் உளுந்த மாவை சேர்த்து கிரைண்டரிலேயே ஆட்டிவிடுங்கள். அதன் பிறகு அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு சேர்க்காமல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் உளுந்தை அரைக்க 25 ல் இருந்து 30 நிமிடங்கள் போதுமானது. இதில் அரைக்கும்போது மாவை தள்ளிவிட கைகளுக்கு பதிலாக மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டியை பயன்படுத்தலாம்.
 
டிப்ஸ் 4:

 

அதேபோல் மாவு அரைக்கும்போது ஐஸ் வாட்டர் பயன்படுத்துவது நல்லது. சிறிதளவு ஐஸ் வாட்டர் ஊற்றிவிட்டு அதன்பிறகு உளுந்ததை ஆட்டினால், உளுந்து பொங்க பொங்க ஆட்ட ஐஸ்வாட்டரை தெளித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி ஆட்டினால் உபரி அதிகம் கிடைக்கும். 

டிப்ஸ் 5:

மாவை பாத்திரத்திற்கு மாற்றியபின் இட்லிக்கு மட்டும் தனியாக எடுத்து வைத்துககொண்டு மீதமுள்ள மாவை உப்பு சேர்க்காமல் ப்ரிட்ஜில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இட்லிக்கு தனியாக எடுத்த மாவில் உப்பு சேர்த்து பயனபடுத்திக்கொள்ளலாம். உப்பு பயன்படுத்திய மாவை வெளியில் 3 மணி நேரம் வைத்திருந்து அதன்பின் ப்ரிட்ஜில் வைப்பது நல்லது. மீண்டும் காலையில், நீங்கள் இட்லி சுடுவதற்கு மாவு தேவையான பதத்திற்கு புளித்திருக்கும்.

இப்படி செய்யும்போது ஒருவாரம் ஆனாலும் பிரிட்ஜில் இருக்கும். உப்பு கலக்காத மாவை தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, மேற்சொன்ன வழிமுறைகளை இனி உங்கள் வீட்டில் பயன்படுத்தி பாருங்கள்!

மேலும் படிக்க...Morning drinks: காபி, டீக்கு மாற்றாக காலையில் தினமும்.... இந்த 3 பானங்களில் ஒன்றை ட்ரை பண்ணுங்க....

click me!