
இரப்பையில் உணவு செரிமானத்துக்கு உதவும் ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே போகும் போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது.வாழ்கை முறை மாற்றம் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
நம் உடலில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை, அவ்வப்போது பெரிதாக நாம் எண்ணுவதில்லை. சில சமயங்களில் தானாகவே இதுபோன்ற பிரச்சனைகள் ஒருசில நாட்களில் சரியாகிவிடும். ஆனால், சில சமயம், சரி ஆகாமல் நீண்ட நாட்கள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே, இந்த செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் கொண்டு வருவது அவசியம்.
அசிடிட்டி அறிகுறிகள்:
வயிற்றில் அசௌகரியம் ஏற்படும். குறிப்பாக வெறும் வயிற்றில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். வயிற்றில் உப்புசம் அல்லது வீக்கம். திடீரென வயிற்று பகுதியில் தொப்பை உண்டாகும். வயிற்று இயக்கத்தில் மாற்றம், மலச்சிக்கல் உண்டாகும். பசி எடுக்காது. கூடவே, நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அசிடிட்டி வருவதற்கான காரணங்கள்:
பசியுடன் அதிக நேரம் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. சாப்பிட்டவுடன் உறங்குவது, சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது, டீ-காபி, புகைபிடித்தல், குளிர் பானங்கள் ஆகியவை அசிடிட்டி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.
மேலும்,ஆசிட் நிறைந்த வினிகர், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் போன்ற பொருட்களை அதிகமாக சாப்பிடும் போதும் ஏற்படுகிறது.
தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இவற்றை தவிர்த்து உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அவசியம்.
ஆசிடிட்டியை போக்க உதவும் உணவுகள்:
வாழைப்பழம்:
வாழைப்பழம் pH ஐ சமன் செய்கிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது அமிலத்தன்மையை நீக்குகிறது. இது தவிர ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, பப்பாளி போன்ற பழங்களும் நன்மை பயக்கும்.
கற்றாழை சாறு:
அசிடிட்டி பிரச்சனை அதிகமாக இருந்தால், உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் நான்கு ஸ்பூன் கற்றாழை சாறு குடிக்கவும். இது அசிடிட்டி பிரச்சனையை குணப்படுத்துகிறது. உணவுகளில் பழைய அரிசி, கோதுமை, பார்லி,மாதுளை, வெள்ளரிக்காய், கீரை, ஆகியவை அமிலத்தன்மையைக் குறைக்கும். இளநீர், மோர் ஆகியவையும் குடிப்பது உடனடி நிவாரணம் தரும்.
காலை உணவாக இடியப்பம்:
காலை உணவாக இடியப்பம், தேங்காய் பால், இட்லி, தோசை போன்ற மெல்லிய உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. மதிய உணவில், அதிக அளவு காய்கறிகளை எடுத்து கொள்ளலாம். ஆனால், காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை உங்கள் அசிடிட்டி பிரச்சனையை மேலும் அதிகமாக்கும்.
துளசி இலைகள் பலன் தரும்:
துளசி இலைகளை மெதுவாக மென்று சாப்பிடுவது குமட்டல், வாந்தி, அமிலத்தன்மை ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும், ஆன்டாசிட் மருந்துகளை பழக்கப்படுத்தாதீர்கள், அதிக நேரம் மற்றும் அளவு எடுத்துக்கொண்டால், அவை பக்கவிளைவுளை உண்டாக்குகின்றன.
எனவே, இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஒருவர் கடைபிடிப்பது அவசியமான ஒன்றாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.