Garlic in Winter : ஒரு பூண்டு பல்லுக்கு இவ்வளவு பவரா? குளிர்க்காலத்துல இப்படி சாப்பிட்டா கோடி நன்மைகள்

Published : Nov 15, 2025, 12:58 PM IST
benefits of garlic in winter

சுருக்கம்

ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொட்டிக் கொடுக்கும் பூண்டை குளிர்காலத்தில் எப்படி சாப்பிட வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பூண்டு பிரபலமான சமையல் பொருளாகும். இது அதன் சுவைக்காக மட்டுமல்ல மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. பூண்டில் அலர்ஜி எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற, ஆன்டிமைக்ரோபியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. அவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பங்களிக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் பூண்டின் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்கச் செய்ய அதை எடுத்துக் கொள்ள சில வழிகள் இங்கே.

குளிர்காலத்தில் பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் :

1. பூண்டில் அல்லிசின் என்ற கலவை அதிக அளவு உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களை எதிர்த்து போராடவும், வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.

2. பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். குறிப்பாக உயரத்தை அழுத்தம் இருப்பவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

3. பூண்டில் நிறைந்திருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் நாள்பட்ட நோயிலிருந்தும் பாதுகாக்கும்.

4. பூண்டில் இருக்கும் அழற்சி எதிப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். மேலும் கீல்வாதம் போன்ற பிரச்சினைக்கு நன்மை பயக்கும்.

5. உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற பூண்டு உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

6. பூண்டு குடல் மற்றும் செரிமானம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாயு, மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.

7. பூண்டு பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரித்து, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன.

8. பூண்டில் இருக்கும் பண்புகள் வயிறு, பெருங்குடல், உணவுக்குழாய் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்கள் வருவதை தடுக்கும்.

9. பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு பண்புகள் சளி, இருமல் மற்றும் சுவாச பிரச்சினையிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும்.

10. பூண்டில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், சல்பர் போன்றவை அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கச் செய்யும்.

குளிர்காலத்தில் பூண்டு சாப்பிட சிறந்த வழிகள் :

வெறும் வயிற்றில் பூண்டு :

இதற்கு 1-2 பூண்டு பற்களை நறுக்கி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சூடான நீருடன் சாப்பிடவும். இதில் இருக்கும் அல்லிசின் என்னும் கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் தொற்றுநோய்களை எதிர்ப்பு போராடும்.

பூண்டு பால் :

1 கிளாஸ் சூடான பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும். பிறகு 1 பல் பூண்டு சேர்த்து கொதிக்க வைக்க குடிக்கவும். இந்த பால் தொண்டை புண்ணை ஆற்றும் மற்றும் பருவகால தொற்றுக்கள் வருவதை தடுக்கும்.

நெய் மற்றும் பூண்டு :

சிறிதளவு நெயில் நறுக்கிய பூண்டை வதக்கி சூடான சாதத்துடன சாப்பிடலாம். இது உடலை சூடாக்கி, உணவு எளிதாக ஜீரணிக்க உதவுகிறது.

சூப்கள்:

காய்கறி கூப், சிக்கன் சூப் ஆகியவற்றை செய்யும் போது அவற்றில் பூண்டு சேர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பூண்டு ஊறுகாய் :

குளிர்காலத்தில் சிறிதளவு கூட பூண்டு ஊறுகாய் சாப்பிடலாம்.

மேலே சொன்ன படி, பூண்டை குளிர்க்காலத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்