
கொள்ளுவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே இது காலம் காலமாகவே பல உடல்நல பிரச்சினைகளை சரி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பாக எடையை குறைக்க, மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றிற்கு இது அருமருந்தாகும். அந்த வகையில் கொள்ளுவில் சுவையான துவையல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கொள்ளு துவையல் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1/2 கப்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
பூண்டு - 7
துருவிய தேங்காய் - 1/2 மூடி
புளி - சிறிதளவு
உப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
தாளிக்க ..
கடுகு, சீரகம், கருவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை :
ஒரு கடாயில் கொள்ளு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்த பிறகு ஆற வைக்கவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்ததாக காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும். அதனுடன் பெருங்காயத்தூளும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவற்றை நன்கு ஆரம்பித்து பிறகு மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் அரைக்கவும். பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் அதனுடன் துவையல் சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான கொள்ளு துவையல் ரெடி.
கொள்ளு துவையல் நன்மைகள் :
- கொள்ளுவில் இருக்கும் நார்ச்சத்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
- இதில் நிறைந்திருக்கும் புரதச்சத்து தசைகளை வலுப்படுத்த உதவும்.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவி செய்யும்.
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
- சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.
- இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவி செய்யும்.
- சரும பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தை தெளிவாக வைக்க உதவுகிறது.
- இதில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.