
[4:35 PM, 11/7/2025] 🖤: இன்றைய நவீன காலகட்டத்தில் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. இதனால் கண்களில் அழுத்தம், வறட்சி, எரிச்சல், சோர்வு, அரிப்பு, சிவப்பு நிறமடைதல், தலைவலி போன்றவை ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க சிலர் கண்களுக்கு மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மருந்துகள் ஏதும் இல்லாமல் இத்தகைய பிரச்சினைகளிலிருந்து விடுபட ஒரு சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
1. 20-20-20 விதி :
நீங்கள் நீண்ட நேரம் இமைகளை அசைக்காமல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்த்துக் கொண்ட இருந்தால் கண்களில் எரிச்சல், வறட்சி மற்றும் சோர்வு ஏற்படும். பிறகு நாளடைவில் தூரப் பார்வை அல்லது கிட்ட பார்வை போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளன. இதை தவிர்க்க, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடிகளுக்கு 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை பார்க்க வேண்டும். இது கண் தசைகளை ரிலாக்ஸ் ஆக வைக்கவும், சோர்வை குறைக்கவும் உதவுகிறது.
2. அடிக்கடி கண் சிமிட்டுங்கள் :
கம்ப்யூட்டரை உற்றுப் பார்க்கும்போது மிகவும் குறைவாகவே கண் சிமிட்டுகிறோம். இதனால் கண்கள் வறண்டு போகலாம். எனவே கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் கண்கள் ஈரப்பதத்துடன் இருக்கும்.
3. நீரேற்றுமாக இருங்கள் :
உடலை நீரேற்றுமாக வைத்துக் கொள்வதன் மூலம் கண் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். எனவே போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
4. குளிர்ந்த நீர் :
கண்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வறட்சியை போக்க சிறந்த வழி குளிர்ந்து நீரால் கண்களை கழுவுவதாகும். அதிலும் நீங்கள் நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்தால் கண்கள் சீக்கிரமாகவே சோர்வடைந்துவிடும். ஏனெனில், கம்ப்யூட்டரில் இருந்து வரும் கதிர்கள் கண்களில் அரிப்பு, வறட்சி, எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது குளிர்ந்து நீரால் கண்களை கழுவுங்கள்.
5. வேலை செய்யும் சூழல் :
நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் திரையின் வெளிச்சம் போதுமானதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதுபோல பணியிடத்தில் பணிச் சூழல் அமைப்பையும் மேம்படுத்தவும்.
6. கண்களுக்கு எளிய பயிற்சிகள் :
இரண்டு உள்ளங்கைகளை ஒன்றாக தேய்த்து அதிலிருந்து வரும் சூட்டை கண்கள் மீது வைக்கவும். இது தவிர வெள்ளரிக்காய் துண்டு அல்லது கற்றாழை ஜெல்லை கண்களில் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும். இதனால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.
7. ஆரோக்கியமான உணவுகள் :
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இவை கண் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
எப்போது மருத்துவரை அணுகவும் ?
மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றிய பிறகும் கண் வறட்சி அல்லது எரிச்சல் தொடர்ந்தால் உடனே கண் மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.