Red Rice benefits: நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான, சிவப்பு அரிசியின் பல்வேறு நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.
நமது பாரம்பரிய அரிசி வகையில் சிவப்பு அரிசி முக்கியமானது. இது பல ஆண்டுகளாக முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், சமீப காலமாக இவற்றின் பயன்பாடு குறைந்து காணப்படுகிறது. இன்று நம்மில் பலருக்கு கருப்பு அரிசி மற்றும் பழுப்பு அரிசி, வெள்ளை அரிசி பற்றி தெரியும் ஆனால் சிவப்பு அரிசி மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றி தெரியுமா..? இந்த அரிய வகை அரிசியின் பல நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.
சர்க்கரை நோயாளிகள்:
சாதாரண அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் சாப்பிட கூடாது. ஆனால், சிவப்பு அரிசியின் குறைந்த கிளைசெமிக் குறியீடு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை உணவாக உட்கொள்ளலாம்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு..?
இது நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை, அஜீரண கோளாறு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்க்கு உகந்தது..?
சிவப்பு அரிசியின் தவிடு கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. சிவப்பு அரிசியில் இருக்கும் முழு தானியங்கள் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை எளிதில் குறைக்கலாம். இதில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடண்ட் இதயத்துக்கு நன்மை செய்யகூடியது.
ஆக்ஸிஜன் நுகர்வை அதிகரிக்கும்:
சிவப்பு அரிசியில் இரும்புச்சத்து நிரம்பியுள்ளது, மேலும் தினமும் சிவப்பு அரிசியை உட்கொள்வது ஆக்ஸிஜனை உறிஞ்சி உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் செல்களுக்கும் அனுப்ப உதவுகிறது.இதனால் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, சிவப்பு அரிசி உடல் ஆரோக்கியம் போன்று சருமத்துக்கும் அதிக நன்மைகளை செய்கிறது. இதனால் நீங்கள் எப்போதும் இளமையாக தோன்றலாம்.