இரவு தூங்கும் முன் ஜாதிக்காய் தண்ணீர்... இந்த '7' பிரச்சனை கிட்ட கூட வராது!!

Published : Dec 30, 2024, 11:40 AM IST
இரவு தூங்கும் முன் ஜாதிக்காய் தண்ணீர்... இந்த '7' பிரச்சனை கிட்ட கூட வராது!!

சுருக்கம்

Nutmeg Water Benefits : தினமும் இரவு தூங்கும் முன் ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஜாதிக்காய் என்பது ஒரு மசாலா ஆகும் இது Myristica Fragrans என்ற மரத்திலிருந்து தான் வருகிறது. இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது ஜாதிக்காய். இது பொதுவாக இனிப்பு மற்றும் காரமான உணவுகள் பயன்படுத்தப்படுகிறது குறிப்பாக சூப்பகள், இறைச்சிகள், பானங்கள் மற்றும் பல வகையான இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஜாதிக்காய் ஊட்டச்சத்துக்கள்:

ஜாதிக்காயில் தாமிரம், மெக்னீசியம் மாங்கனிஸ், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் நல்ல மூலமாக கருதப்படுகிறது. அதுபோல இதில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்ற சிறிய அளவு வைட்டமின்களும் உள்ளன.

ஜாதிக்காய் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா? ஜாதிக்காயில் இருக்கும் பண்புகள் காரணமாக அது பல நூற்றாண்டுகளாக பல பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இரவு தூங்க செல்வதற்கு தினமும் ஜாதிக்காய் தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இதையும் படிங்க:   Nutmeg Benefits: பெண்களின் வயாகரா ஜாதிக்காய் தான்!! இதன் நன்மைகள் என்ன? பெண்கள் அவசியம் படிக்கவும்...!!!

ஆம், உண்மையில் ஒரு மாதம் ஜாதிக்காய் தண்ணீரை இரவு தொடர்ந்து குடித்து வந்தால் பல உடல் மற்றும் மனப் பிரச்சனைகள் தீர்க்கப்படும். ஏனெனில் ஜாதிக்காயில் ஆன்டி ஆக்சிடன்ட், அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே,  இப்போது இரவு ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:   Astro Tips: நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? அப்போ ஜாதிக்காய் வைத்து இந்த பரிகாரங்கள் செய்யுங்க..!!

இரவு ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

நல்ல தூக்கம் :

ஜாதிக்காயில் இருக்கும் பண்புகள் உடலை தளர்த்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. இதனால் நீங்கள் இரவு நன்றாக தூங்குவீர்கள். எனவே, உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் நீங்கள் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உங்களது நரம்பு மண்டலம் அமைதியாகி, இரவு நிம்மதியாக தூங்குவீர்கள்.

சிறந்த செரிமானம்:

ஜாதிக்காய் தண்ணீர் வயிற்று ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஏனெனில் இதில் இருக்கும் பண்புகள் செரிமான அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி அமிலத்தன்மை, மலச்சிக்கல், வாயு போன்ற வயிற்று தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. எனவே தினமும் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் ஜாதிக்காய் தண்ணீர் குடித்து வந்தால் காலையில் உங்களது வயிறு சுத்தமாக்க உதவுகிறது. முக்கியமாக இந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் செரிமான அமைப்பு மேம்படும் மற்றும் பல செரிமான பிரச்சனைகளும் சரியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்:

ஜாதிக்காயில் இருக்கும் ஆன்டடி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது. எனவே சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவகாலத் தொற்று நோய்களை தரவ இருக்க தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் ஜாதிக்காய் தண்ணீரை குடியுங்கள்.

சரும ஆரோக்கியத்திற்கு:

ஜாதிக்காய் நீரானது சருமத்தை உள்ளே இருந்து ஊட்டமளிக்க உதவுகிறது மற்றும் அதை சுத்தப்படுத்தவும் செய்கிறது. எனவே இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உங்களது சருமம் பளபளப்பாக மாறுவது மட்டுமின்றி, முகப்பரு பிரச்சனைகள் ஏற்படுவது குறையும்.

எடையை குறைக்க உதவும்:

ஜாதிக்காய் நீரில் இருக்கும் பண்புகள் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. முக்கியமாக இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் ஜாதிக்காய் நீர் குடித்து வாருங்கள்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

ஜாதிக்காயில் இருக்கும் பண்புகள் ரத்தத்தை சுத்தப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். முக்கியமாக இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மன அழுத்தம் & பதட்டம் குறையும்:

ஜாதிக்காய் மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு அடிக்கடி மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்பட்டால் இரவு தூங்கும் முன் ஜாதிக்காய் நீரை தொடர்ந்து குடித்து வந்தால் அதிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

ஜாதிக்காய் நீரை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

ஜாதிக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - 1 கிளாஸ்
தேன் அல்லது எலுமிச்சை சாறு - தேவைப்பட்டால்

செய்முறை:

இதற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும்  அடுப்பை அணைத்துவிட்டு அதில் ஜாதிக்காய் பொடியை சேர்த்து கலக்கி சிறிது நேரம் அப்படியே ஆற வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் அதில் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்