Morning Foods : நாம் சாப்பிடும் உணவு நம்முடைய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால், காலை உணவாக எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
நாம் ஆரோக்கியமாக இருக்க காலை உணவு சாப்பிடுவது மிகவும் அவசியம். அதுவும் ஆரோக்கியமாக. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு காரணம் இதுவே. ஏனெனில் நாள் முழுவதும் உங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது ரொம்பவே முக்கியமானது. ஆனால் தற்போது நம்மில் பலரும் காலை உணவில் தவறான சிலவற்றை சாப்பிடுகிறார்கள். இதனால் ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீமை தான் ஏற்படும். எனவே, காலை உணவில் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் சிலவற்றை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
டீ & காபி
நம்மில் பலருக்கும் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இப்படி குடிப்பது தவறு. ஏனெனில், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடித்தால் வயிற்றில் அமில பிரச்சனை அதிகரிக்கும் தெரியுமா. இதன் காரணமாக வயிற்றில் பிரச்சனையா,கி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே காலையில் வெறும் வயிற்றில் டி அல்லது காபி குடிப்பதை தவிர்க்கவும். இல்லையெனில், இதனால் உடலில் கார்டிசோலின் அளவு அதிகரித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
குளிர் பானங்கள்:
உங்களுக்கு காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். குறிப்பாக கோடையில் இந்த தவறை நிறைய பேர் செய்வார்கள். ஆனால், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குளிர்பானம் குடித்தால் உடலில் ஆற்றல் இழப்பு ஏற்படும்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் இந்த '5' பொருள்களை சாப்பிடுங்க; சுகர் கண்ட்ரோலா இருக்கும்!
காரமான உணவுகள்:
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது. இல்லையெனில் அதனால் உங்களுக்கு வயிற்று வலி ஏற்படும். அதுமட்டுமின்றி, கூடுதலாக உங்களுக்கு வயிற்று தொடர்பான பிரச்சனைகள் வரும். அதாவது அஜீரணம், அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர, காலையில் வெறும் வயிற்றில் பொறித்த உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
தயிர்:
தயிரில் இருக்கும் புரோபயாடிக் கல்சியம் பற்கள் மற்றும் முழு உடலுக்கும் ஆரோக்கியமானது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடும் போது வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். மேலும் அமிலத்தன்மையையும் ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: ஆயுசு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? அப்ப தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்!
சிட்ரஸ் பழங்கள்:
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இந்த பழங்களில் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளதால் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகி, இதன் காரணமாக உடலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சர்க்கரை உணவுகள்:
காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில், அதனால் நாள் முழுவதும் நீங்கள் சோர்வாகவும், சோம்பலாகவும் இருப்பீர்கள். அதுமட்டுமின்றி இதனால் உங்களது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, நாள் முழுவதும் உங்களுக்கு பசி ஏற்படும்.
பச்சை காய்கறிகள்:
நம்மில் சிலருக்கு வெறும் வயிற்றில் பச்சை காய்கறிகள் சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். ஆனால் அப்படி சாப்பிடுவது தவறு. ஏனெனில் அதன் காரணமாக செரிமான அமைப்பில் மோசமான விளைவு ஏற்படும். அதாவது பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.