Ghee And Warm Water Benefits : சூடான நீரில் 1 ஸ்பூன் நெய் கலந்து அதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.
இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் பலர் பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். மேலும் சருமம் உட்பட பல வகையான உடல்நலப் பிரச்சனைகளும் நம்மைக் கவலையடையச் செய்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், நாம் நம்முடைய உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நம் உடலை உள்ளே இருந்து வலிமையாக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஒரு பொருளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அது வேற ஏதும் இல்லைங்க நெய் தான்.
ஆம், நெய் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி சருமம் உட்பட நம்முடைய ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். அந்தவகையில், ஒரு ஸ்பூன் தேசி நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சிறப்பு பானம் பற்றி ஆயுர்வேதத்திலும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த பானத்தை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
செரிமானத்தை மேம்படுத்தும்:
வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து அதை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் சுத்தமாக்கப்பட்டு, செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகிறது
உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது:
நெய் உடலுக்கு தேவையான வலிமையையும் ஆற்றலையும் வழங்கும். எனவே, சூடான நீரில் 1 ஸ்பூன் நெய் கலந்து அதை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பீர்கள்.
இதையும் படிங்க: இந்த '6' பிரச்சினை உள்ளவங்க வெறும் வயிற்றில் மறந்தும் நெய் சாப்பிடாதீங்க!!
சருமம் பளபளப்பாகும்:
நெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளித்து பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும். இதற்கு சூடான நீரில் 1 ஸ்பூன் நெய் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.
மாதவிடாய் நிவாரணம்:
சூடான நீரில் 1 ஸ்பூன் நெய் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக இந்த நெய் பானம் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய்.. தினமும் சாப்பிட்டால் இந்த '6' நோய்கள் கிட்ட கூட நெருங்காது!!
நச்சு நீக்கம்:
சூடான நீர் மற்றும் நெய் கலவையானது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி கல்லீரலை சுத்தப்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றது.
எடையை குறைக்கும்:
நெய் உடல் எடையை அதிகரிப்பது மட்டுமின்றி, எடையை குறைக்கும் உதவும் தெரியுமா? ஆம், சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் எடை குறையும்.
நினைவாற்றல் கூர்மையாகும்:
உங்களுக்கு ஞாபகம் மறதி இருந்தால் சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் இனி ஞாபகம் மறதி பிரச்சினை இருக்காது. உங்களது நினைவாற்றல் கூர்மையாக இரும்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்:
சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால், நெய்யில் இருக்கும் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது.
ரத்த ஓட்டம் மேம்படும்:
தினமும் காலை வெறும் வயிற்றில் சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் உடலில் ரத்த ஓட்டம் சரியாக ஓடும்.
மன அழுத்தம் நீக்கும்:
உங்களுக்கு அதிகமான அழுத்தம் மற்றும் பதட்டம் இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் குடித்து வாருங்கள் இதனால் உங்களது மன அழுத்தம் குறையும்.
எப்படி குடிக்கலாம்?
காலையில் வெறும் வயிற்றில், ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் சுத்தமான நெய்யை கலந்து குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த சிறப்பு பானம் குடித்த பிறகு 30 நிமிடங்களுக்குள் எதையும் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ வேண்டாம்.