தமிழக விவசாயின் மகள் ஆசிய தடகள போட்டியில் தங்கம்..! சீறி பாய்ந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த வீர தமிழச்சி...!

By ezhil mozhiFirst Published Apr 23, 2019, 4:14 PM IST
Highlights

ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று, தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உள்ளார் கோமதி மாரிமுத்து.

தமிழக விவசாயின் மகள் ஆசிய தடகள போட்டியில் தங்கம்..!

ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று,தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தந்திருக்கிறார் கோமதி மாரிமுத்து.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில், நேற்று  நடந்த  800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை  வென்று உள்ளார். வெறும் 2 நிமிடம் 70 விநாடிகளில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் 

கோமதி மாரிமுத்து பெற்ற தங்கம் தான் ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கே கிடைத்த முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து, ஈட்டி எறிதலில் ஷிவ்பால் சிங் என்பவர் 86.23 மீட்டர் வீசி  வெள்ளிப் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்த்து உள்ளார். இந்த போட்டியில் இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை இந்தியா பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கப்பதக்கம் வென்ற கோமதி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

click me!