காசி விஸ்வநாதருக்கு தலைப்பாகை தயாரிக்கும் இஸ்லாமியர்! 250 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம்!

By SG Balan  |  First Published Mar 15, 2023, 5:49 PM IST

அக்பர் அணிந்திருந்தைப் போன்ற தலைப்பாகையை புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிவனுக்கு ஆண்டுதோறும் காணிக்கையாக செய்து கொடுக்கிறார் இஸ்லாமியரான கியாசுதீன்.


அந்தக் காலத்து ஓவியங்களில் முகலாயப் பேரரசர் ஜலாலுதீன் அக்பர் அணிந்திருந்த தலைப்பாகையை சின்னஞ்சிறிய அளவில் உருவாக்கக்கூடிய திறமை படைத்த ஒரே கலைஞர் ஹாஜி கியாசுதீன் அகமது. இஸ்லாமியரான கியாசுதீன் ஐந்து கெஜம் துணியைக் கொண்டு தயாரிக்கும் அந்த அக்பர் தலைப்பாகைதான் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவபெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது.

வாரணாசியில் கங்கைக் கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருத்தலம் காசி விஸ்வநாதர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குமி மாதம் அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி அன்று சிவபெருமானுக்கு அக்பர் தலைப்பாகை அணிவிக்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றை இந்த ஏகாச்சியில் கொண்டாடுகிறார்கள். சிறப்பு வாய்ந்த அந்த நன்னாளில் காசி விஸ்வநாதரும் பார்வதியும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பீடத்தில் வீற்றிருப்பார்கள். இந்த ஆண்டு அந்தப் பீடம் காஷ்மீரில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.

ரூ. 252 கோடிக்கு வீடு! இந்தியாவின் காஸ்ட்லீ வீட்டை வசப்படுத்திய நீரஜ் பஜாஜ்

ஹோலி பண்டிகையை ஒட்டி இந்த ஏகாதசி திருநாளும் வருவதால் வாரணாசியில் உள்ளூர் மக்கள் இதனை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். சுமார் 250 ஆண்டுகளாக சிவபெருமானுக்கு தலைப்பாகை தயாரித்து வழங்கும் பணியை கியாசுதீனின் குடும்பம் தான் செய்துவருகிறது. பல தலைமுறைகளாக அவர்கள் அக்பர் தலைப்பாகை செய்யும் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கியுள்ளார்.

வாரணாசி நகரம் இந்து மதத்தின் முக்கியத் திருத்தலமாக இருந்தாலும் இந்து - முஸ்லீம் ஒன்றைக்காகவும் மிகவும் பிரபலமானது. இசைக்கலைஞர் பிஸ்மில்லா கான் போன்ற பல புகழ்பெற்ற முஸ்லீம் பிரமுகர்கள் வாரணாயில் இருந்திருக்கிறார்கள்.

கியாசுதீனின் குடும்பம் இப்போது வாரணாசி நகரின் லாலாபுரா பகுதியில் வசித்து வருகிறது. சிவபெருமானுக்கு அழகிய கலை வேலைப்பாடுகளுடன் அக்பர் தலைப்பாகையை உருவாக்குவது போல, பகவான் கிருஷ்ணருக்கும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தலைப்பாகை தயாரித்துக் கொடுக்கிறார் கியாசுதீன். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது அணிவதற்கான அழகான தலைப்பாகைகளையும் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

Rishi Sunak: பிரதமரே இப்படி பண்ணலாமா? நாயை திரியவிட்ட ரிஷி சுனக்கை கண்டித்த போலீஸ்

"காசி விஸ்வநாதருக்கு தலைப்பாகை செய்வது பொறுப்புடன் செய்யவேண்டியது; மரியாதைக்குரிய விஷயமும்கூட. முன்னோர்களால் தொடங்கப்பட்டதை தொடர்ந்து பின்பற்றி வருவது என் பாக்கியம்." என கியாசுதீன் சொல்கிறார். “நாங்கள் அனைவரும் சேர்ந்து தலைப்பாகை செய்கிறோம். ஒருவர் துணியை வெட்டுவார், இன்னொருவர் அதைத் தைப்பார், வேறு ஒருவர் அலங்கரிக்கும் வேலையைச் செய்வார். பட்டுத் துணி, தங்கம் அல்லது வெள்ளி ஜரிகை, அட்டை போன்றவற்றை பயன்படுத்தித் தயாரிக்கிறோம். ஒரு தலைப்பாகையைச் செய்து முடிக்க ஒரு வாரம் வரை ஆகிவிடும்" என்கிறார் கியாசுதீன்.

காசி விஸ்வநாதருக்காகச் செய்யும் பிரத்யேகமான தலைப்பாகை விலைமதிப்பற்றது என்றும் அதை வெறொருவர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து செய்துதரச் சொன்னாலும் செய்யமாட்டேன் என்றும் கயாசுதீன் தெரிவிக்கிறார். மேலும், "ஒரு சேவையாகவே இதைச் செய்கிறோம்; லாபம் ஈட்டுவதற்காக அல்ல. இதன் மூலம் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தெய்வத்தின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதாகக் கருதுகிறோம்" என்றார்.

"நாங்கள் இந்து - முஸ்லிம்களை தனித்தனியானவர்கள் என்று கருதவில்லை. எல்லோருமே எங்களுக்கு இரத்த உறவுகள். அதை நாங்கள் இரத்தத்தின் மூலம் நிரூபிக்க வேண்டியதில்லை; அதை எங்கள் செயல்களில் காட்டுகிறோம்.” என்று தெரிவிக்கிறார் கியாசுதீன் அகமது.

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 இந்தியாவில் உள்ளவை: ஆய்வில் தகவல்

click me!