அரிசியை பாதுகாக்கும் இலவங்கம், பட்டை மற்றும் கிராம்பு..!!

By Asianet Tamil  |  First Published Mar 15, 2023, 1:10 PM IST

நீண்டக் கால தேவைக்காக தானியங்கள் சேமித்து வைக்கும் போத, அவை கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறு பூச்சிகளின் தாக்குதலால் நெற்பயிர்களுக்கு சேதம் ஏற்படும். அதே பிரச்னை சேமித்து வைக்கப்படும் தானியங்களுக்கும் பொருந்தும்.
 


பெரும்பாலான வீடுகளில் உணவை ஒன்றாக வாங்கி சேமித்து வைப்பதுதான் வழக்கம். காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி மற்றும் பால் போன்ற உணவுகள் மட்டுமே வேண்டும் என்கிற போது வாங்கப்படுகின்றன. அரிசி, பருப்பு, மசாலா மற்றும் எண்ணெய் போன்ற நீண்டகால பயன்பாட்டை கருதி முன்னரே வாங்கப்பட்டு விடும். அவற்றை வாங்கி நீண்ட நாட்கள் சேமித்து வைத்தால், அவை கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். சிறு பூச்சிகளின் தாக்குதலால் நெற்பயிர்களுக்கு இந்த சேதம் அடிக்கடி ஏற்படுகிறது. அது சேமித்து வைக்கக் கூடிய தானியங்களுக்கும் பொருந்தும்.

இலவங்கப்பட்டை

Tap to resize

Latest Videos

அரிசையை சேமித்து வைக்கும் சாக்கு முட்டை அல்லது வாலியில், இலவங்கப்பட்டை அல்லது பிரிஞ்சி இலைகளை ஒரு கவரில் சுற்றி போட்டுவைக்கலாம். இதன்மூலம் சிறிய பூச்சிகள் எதுவும் உள்ளே வராமல் இருக்கும். ஒவ்வொரு படி அரிசையை கொட்டி வைக்கும் போது, இடையில் இரண்டு அல்லது மூன்று பிரிஞ்சி இலைகளை வைக்க வேண்டும். மேலும் அரிசியை முழுவதுமாக பாத்திரத்தில் கொட்டிய பிறகு நன்றாக மூடி வைப்பது முக்கியம்.

பிரிஞ்சி இலைகள்

இலவங்கப்பட்டையைப் போலவே, பிரிஞ்சி இலைகளையும்  அரிசி பாத்திரத்தில் சேகரித்து வைக்கலாம். அதன் வாசனை பூச்சிகளை விரட்ட பெரிதும் உதவுகிறது. மேலும் அரிசி நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது. பயன்படுத்தவும் நன்றாக இருக்கும். 

பூண்டு

பூண்டை உரித்து அரிசியில் ஈரமில்லாமல் ஒரு சில கிராம்புகளை, அதில் குத்தி வைப்பது பூச்சிகளை விரட்ட உதவும். கிராம்புகளை அரிசி பாத்திரத்தில் போட்டு பாருங்கள். அரிசியின் மத்தியில் ஒரு கைப்பிடி கிராம்புகளை தூவி விடுங்கள். அதன் வாசனையும் பூச்சிகளை விரட்டும்.

உணவுமுறையை மாற்றினால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம்..!!

ஒன்றாக சேமிக்கக்கூடாது 

நீங்கள் மொத்தமாக வாங்கிய அரிசியை ஒரே இடத்தில் சேமித்து வைக்கக்கூடாது. நீங்கள் பீப்பாய் அல்லது வாலியில் கொட்டியது போக, மீதமுள்ளவரை வேறு பாத்திரத்தில் கொட்டி வைக்க வேண்டும். அந்த பாத்திரத்தை ஒருசில நாட்களுக்கு இறுக்கமாக முடி வையுங்கள். சமையலுக்கு தேவைப்படும் போது, அரிசியை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி, அதிலிருந்து எடுத்து பயன்படுத்தி வாருங்கள். 

அரிசியில் சிறு பூச்சிகளின் தொந்தரவு இருப்பதைக் கண்டால், அதை ஒரு தட்டி அல்லது தாம்பாலத்தில் கொட்டி சிறிது நேரம் வெயிலில் பரப்பி வைத்துவிடுங்கள். பூச்சிகள் உடனடியாக அரிசியை விட்டுவிட்டு ஓடிப்போகும். மேலும் அரிசி நல்ல பக்குவத்துக்கு மாறிவிடும்.
 

click me!