ரூ. 252 கோடிக்கு வீடு! இந்தியாவின் காஸ்ட்லீ வீட்டை வசப்படுத்திய நீரஜ் பஜாஜ்

By SG Balan  |  First Published Mar 15, 2023, 4:33 PM IST

நீரஜ் பஜாஜ் புதிதாக வாங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு இந்தியாவில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு என்ற சாதனையைப் படைத்துள்ளது.


பஜாஜ் குழுமத்தின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்குத் தலைவராக செயல்பட்டுவரும் நீரஜ் பஜாஜ் மும்பையில் புதிதாக பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கிப் போட்டிருக்கிறார்.

லோதா மலபார் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு தெற்கு மும்பையின் வாக்கேஷ்வர் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. லோதா குழுமத்தின் கட்டுமான நிறுவனமான மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் இந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டுகிறது. இந்தக் குடியிருப்பை தன்வசப்படுத்தியுள்ளார் தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ்.

Tap to resize

Latest Videos

நீரஜ் வாங்கியிருக்கும் வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ரூ.252.5 கோடி விலை கொடுத்து இந்த வீட்டை நீரஜ் வாங்கி இருக்கிறார். பத்திரப் பதிவு செய்வதற்கு மட்டும் ரூ.15 கோடி செலவாகியுள்ளது. இதுதான் தற்போது இந்தியாவில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீடு.

Rishi Sunak: பிரதமரே இப்படி பண்ணலாமா? நாயை திரியவிட்ட ரிஷி சுனக்கை கண்டித்த போலீஸ்

சென்ற மாதம் இதே மும்பை நகரில் வொர்லி டவரில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்த மற்றொரு ஆடம்பர வீடு ரூ.240 கோடிக்கு விலை போனது. அனைத்து விதமான சொகுசு வசதிகளும் உள்ள அந்த வீட்டை வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவரான தொழில் அதிபர் பி. கே. கோயங்காவுக்கு வாங்கி இருந்தார். அப்போது அதுதான் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீடாக இருந்தது. ஆனால் ஒரே மாதத்திற்கு உள்ளாகவே நீரஜ் பஜாஜ் ரூ.252 கோடிக்கு வீட்டை வாங்கி அந்த சாதனையை முறியடித்துவிட்டார்.

நீரஜ் வாங்கி இருக்கும் லோதா மலபார் டவர் வீட்டிற்காக ஒரு சதுர அடிக்கு ரூ.1.40 லட்சம் வீதம் செலவிட்டுள்ளார். லோதா மலபார் டவர் தெற்கு மும்பையில் கவர்னர் மாளிகைக்கு மிக அருகில் கட்டப்படுகிறது. 31 மாடிகள் கொண்ட 3 பிரிவுகளாக எழும்பிவரும் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்க நிலையில்தான் உள்ளன. 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் இதனைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தொழிலதிபர் நீரஜ் பஜார் தற்போது தனது குடும்பத்துடன் பெடர் சாலையில் உள்ள மவுண்ட் யூனிக் கட்டிடத்தில் வசித்து வருகிறார். பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தாலும், அந்தக் கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதாலும் புதிய சொகுசு வசதிகள் அங்கு இல்லை என்பதாலும் லோதா மலபார் டவருக்கு மாற முடிவு செய்துள்ளனர். லோதா மலபார் டவரில் நீச்சல் குளத்துடன் கூடிய மொட்டை மாடி போன்ற பல புதுமையான வசதிகள் உள்ளன.

Land for Jobs Scam: லாலு பிரசாத், ராப்ரி தேவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

click me!