வாழைக்காய்கள் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன என்று உணவு ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தெரிவித்துள்ளார்
பொதுவாக வாழைப்பழங்கள் என்பது உலகம் முழுவதும் பிரபலமான பழமாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்த வரை வாழைக்காய் என்பதும் சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.பொரியல், வறுவல், குழம்பு என எதுவாக இருந்தால் வாழைக்காய் சேர்க்கப்படுகிறது.
இந்த சூழலில் வாழைக்காய்கள் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன என்று உணவு ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் உங்களை ஆச்சர்யப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே வாழைக்காய்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Silent Heart attack : அறிகுறிகளே தெரியாது.. கவனிக்கவில்லை எனில் உயிருக்கே ஆபத்து..
செரிமானத்தை அதிகரிக்கும்
வாழைக்காய் சாதாரண குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது. புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் இதய நோய்களை மேம்படுத்தும் விளைவுகள் உள்ளிட்ட வலுவான நன்மகளை ஏற்படுத்தும் பினாலிக் கலவைகள் வாழைக்காயில் நிறைந்துள்ளன. மேலும் ப்ரீபயாடிக் விளைவைக் கொண்டிருக்கின்றன, அவௌ ஆரோக்கியமான வயிற்றிற்கு உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகின்றன.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
வாழைக்காய்களில் இதயத்திற்கு உகந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரங்களாக உள்ள வாழைக்காய்களில், எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தும் நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான சர்க்கரை அளவைப் பராமரிப்பதில் நன்மை பயக்கும். அதன் பொட்டாசியம், தசைகளின் சுருக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
நீரிழிவு நோய்க்கு ஏற்றது
வாழைப்பழங்களை ஒப்பிடும் போது, வாழைக்காய்களில் குறைந்த சர்க்கரை உள்ளது. அதில் உள்ள பெக்டின் மற்றும் எதிர்ப்பு மாவுச்சத்து உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இது மேலும் உங்கள் உடல் செல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. வாழைக்காய்களில் அத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. அவை வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் பல பைட்டோநியூட்ரியண்ட்களைக் கொண்டுள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்க உதவும்.
உடல் எடையை குறைக்க உதவும்
வாழைக்காய்களில் உள்ள உயர் எதிர்ப்பு ஸ்டார்ச் மற்றும் பெக்டின் உள்ளடக்கம் உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவும். அதன் நார்ச்சத்து நிறைந்த உள்ளடக்கம் உணவுக்குப் பிறகு திருப்தியாக உணரவைக்கும். இதனால் அது அதிகப்படியான கலோரிகளை நீக்கி, பயனுள்ள எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
செரிமான பிரச்சனையா? அப்ப கண்டிப்பா இந்த 5 பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்..