Summer Tips: கொளுத்தும் வெயிலால் முகக்கருமையா..? சருமத்தை பாதுகாக்க நச்சுனு நாலு வீட்டு வைத்திய குறிப்புகள்...

By Anu KanFirst Published May 12, 2022, 2:54 PM IST
Highlights

Summer beauty Tips: அதிக வெளியின் காரணமாக முகத்தில் ஏற்படும் கருமையை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. இவற்றை படித்தால் நிச்சயம் நீங்கள் பயன்பெறலாம்.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சருமத்தை சூரியனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.  அதற்கு முக்கியமாக கீழே சொன்ன வீட்டு வைத்திய குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

எலுமிச்சை மற்றும் தேன்: 

வெயில் காலத்தில், முகத்தில் உள்ள கருமை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. இவை இன்னும் ஏராளமான நன்மைகளையும் கொண்டுள்ளது. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த பள்ளங்கள். தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேன் தினசரி பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

குறிப்பாக, தேன் முகத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருவதோடு வறட்சியிலிருந்து காத்து, பருக்கள் வராமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, முகத்தில் வரக்கூடிய சுருக்கங்கள், வயதான தோற்றம் போன்றவற்றை தள்ளி போடும். இதேபோல், எலுமிச்சை சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை எப்போதும் மினுமினுப்பாக வைத்திருக்கும்.

கடலைமாவு,  மஞ்சள் தூள், தயிர்:

வெயில் காலத்தில், சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவு சிறந்த தீர்வாகும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர்,  மஞ்சள் தூள், தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும்.

பின்னர் 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவவும். இதனால், வெயில் காலத்தில் தோன்றும் தேவையற்ற எண்ணெய் பசை காணாமல் போவதோடு முகம் புத்துணர்ச்சியாகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்:

அதேபோன்று முகம் பொலிவு பெற,  பீட்ரூட் ஜூஸ், கற்றாழை ஜூஸ், நீர்மோர், கேரட் ஜூஸ், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. இவை வெயில் காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கும். அதேபோன்று, வெயில் காலத்தில், மதியம் 12 முதல் 5 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அந்த நேரத்தில் தான் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கும். 

கருவளையம்:

வெயில் காலத்தில் அதிகமாக சிலருக்கு கண், மூக்கு, உதடு பகுதிகளைச் சுற்றிக் கருவளையம் இருக்கும். இதற்கு தீர்வாக, புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமத்தைப் பெறலாம். இது தவிர, உருளைக்கிழங்கை மையாக அரைத்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால், மெல்ல மெல்ல நீங்கும்.

 மேலும் படிக்க....Sani Peyarchi Palangal 2022: கும்பத்தில் சனிப்பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு பஞ்சமகா புருஷ யோகம் இருக்கும்...

click me!