Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில், நவகிரக நாயகர்களில் குரு பகவானுக்கு தனி சிறப்பு உண்டு. குருவின் பார்வையால் தான் மங்களங்கள் ஏற்படும். இன்றைய 12 ராசிகளின் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில், நவகிரக நாயகர்களில் குரு பகவானுக்கு தனி சிறப்பு உண்டு. குருவின் பார்வையால்தான் மங்களங்கள் ஏற்படும். கடந்த 2022 ஏப்ரல் 12-ம் தேதி குரு பகவான் தனது ராசியான கும்ப ராசியில் இருந்து தான் ஆளும் மீன ராசிக்கு இடம் மாறியுள்ளார்.
இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மை பிறக்கும். சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை தரும். அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு குரு 11ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி உள்ளார். குருவின் யோகத்தால், கடன் பிரச்சனை நீங்கும். சிலர், வாகனம் வாங்குவீர்கள். உங்களுடைய பலநாள் முயற்சி வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சி 9ம் இடத்தில் உள்ளது. தொட்டதெல்லாம் துலங்கும். சகோதர்கள் உதவி கிடைக்கும். சொத்து வாங்கவும், விற்கவும் செய்வீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பிறக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சி 10இடத்தில் குரு பெயர்ச்சி நிகழ்ந்து உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். ஆடை, ஆபகரணங்களை வாங்குவீர்கள். அவசர முடிவுகள் எதிலும் எடுக்காதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்கள் குரு பெயர்ச்சி 10இடத்தில் இருப்பதால், யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன்கள் உண்டு.
சிம்மம்:
குருவின் பெயர்ச்சி உங்களுக்கு, பணம் ஒருபுறம் வந்தாலும் செலவுகள் வரும். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாதீர்கள். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான பலன் உண்டாகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு, குருவின் பெயர்ச்சி எதிர்காலத்துக்கான பெரிய திட்டங்கள் உண்டாகும். திடீர் பண வரவு உண்டாகும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். இந்த நாள் வசீகரமாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் மாற்றம், முக்கிய பதவி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலைப்பொருட்கள் வந்து சேரும். தேவையற்ற முன் கோபங்களை கட்டுப்படுத்துவது நல்லது. இந்த ஒரு முக்கிய முடிவையும் சிந்தித்து எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் மாற்றம் மாறுபட்ட அணுகுமுறையால், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இந்த நாள் அதிரடியான திடீர் திருப்பங்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பிறக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். திருமண யோகம் கிடைக்கும்.
தனுசு:
தனுஷில் பிறந்தவர்களுக்கு குருவின் மாற்றம் யோகம் பிறக்கும். ஒரே நேரத்தி பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் இருக்கும். எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி நிச்சயம். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும்.
மகரம்:
குருவின் மாற்றம் மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவ அறிவு பல அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நவீன உத்திகள் கையாளும் திறன் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் மாற்றம், இந்த நாள் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. கணவன்-மனைவி இடையே முன்னேற்றம் அதிகரிக்கும். எதிலும், விட்டுக் கொடுத்து செல்வது நலம் தரும். தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
மீனம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு, குருவின் பார்வை பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற அலைச்சலை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய பலம் தெரிய ஆரம்பிக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.