
இந்த ஆண்டில் முதல் சந்திர கிரகணம் மே 16ஆம் தேதி வைஷாக பூர்ணிமா தினத்தில் விருச்சிக ராசியில் நடைபெறும். இதன் அசுப பலன்கள் சில ராசிகளுக்கு இருக்கும். இருப்பினும், கிரகண காலம் சில ராசிக்கு அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
2022 ஆம் ஆண்டில் இரண்டு சந்திர கிரகணங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் முதல் சந்திர கிரகணம் மே 16ஆம் தேதி வைஷாக பூர்ணிமா தினத்தில் நடைபெறும். அடுத்தது இன்னும் 6 மாதம் கழித்து நவம்பர் மாதத்திலும் நிகழும்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், விருச்சிக ராசியில் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. எனவே அதன் பாதிப்பும் தாக்கமும் இந்தியாவில் இருக்காது. முன்னதாக, ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணம் வைகாசி மாத அமாவாசை அன்று நிகழ்ந்தது. இந்த நாளில் விசாக நட்சத்திரமும் கூடி வருவது நன்மையாக இருக்கும்.
இந்த சந்திர கிரகணத்தில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அமைக்கும் கூட்டணி குறிப்பாக கேளே குறிப்பிட்டுள்ள 3 ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை தர இருக்கிறது. யார் அந்த அதிஸ்ட்கார ராசிகள் என்பதை பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திர கிரகணம் மாற்றம், அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். குறிப்பாக தொழில் மற்றும் பணியிடங்களில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.பண வரத்து அதிகமாக இருக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம் இதுவாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். திருமண யோகம் கைக்கூடும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, சந்திர கிரகணம் மாற்றம் சிறப்பாக அமையும். வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வு பெறலாம். வருமானம் அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.தொட்டது துலங்கும். வாழ்வில் வெற்றி நிச்சயம். இருப்பினும், எதிலும், எச்சரிக்கை தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திர கிரகணம் சாதகமான பலனைத் தரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். செல்வம் பெருகும். பொருளாதார பிரச்சனை சரியாகும். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.