குரு பெயர்ச்சியால்...இன்னும் ஒரு வருடத்திற்கு இரட்டிப்பு யோகம் பெறும் ராசிகள்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

Anija Kannan   | Asianet News
Published : May 10, 2022, 06:00 AM IST
குரு பெயர்ச்சியால்...இன்னும் ஒரு வருடத்திற்கு இரட்டிப்பு யோகம் பெறும் ராசிகள்...இன்றைய 12 ராசிகளின்  பலன்கள்!

சுருக்கம்

Guru Peyarchi 2022: குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளைத் தரும். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு நல்ல பலன் தரும் என்று பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரத்தில், நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் அன்பு, ஆசிரியர், அறிவு, குழந்தைகள், கல்வி, மதப்பணி, புனித, நல்லொழுக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2022 ஏப்ரல் 12-ம் தேதி குரு பகவான் தனது ராசியான தான் ஆளும் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளைத் தரும். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு நல்ல பலன் தரும் என்று பார்ப்போம்.

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு விஷயத்திலும் துணிந்து முடிவு எடுத்து அதில் வெற்றியும் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், புதுப் புது விஷயங்களை கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உற்சாகம் மேம்படும். வேலை செய்யுமிடத்தில் புகழையும் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். 

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், நல்ல நாளாக இருக்கும். முடிவெடுப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.  இருப்பினும், வேலை செய்யும் இடத்தில் மறைமுக எதிரிகளால் சின்ன சின்ன பிரச்சனை வந்து போகலாம்.

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், கொஞ்சம் சவால் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். எதையுமே ஒன்றுக்கு பலமுறை முயற்சி செய்தும் போது தான் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிட்டும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், சிறப்பாக இருக்கும். எதையும் சாதுரியமாக பேசியே சமாளிக்கப் போகிறீர்கள். வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். எதிலும், துணிச்சலுடன் செயல்படுங்கள். 

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லோரிடத்திலும் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். எதிலும், கவனமாக இருங்கள்.

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், சந்தோஷமான நாளாக இருக்கும். கிடப்பில் கிடந்த வேலைகளெல்லாம் முடிவுக்கு வரும். அரசாங்க வேலையில் கொஞ்சம் இழுபறி இருக்கும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. போட்டி தேர்வுகளில் வேற்றி நிச்சயம்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், சிறப்பாக இருக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். 

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். பிள்ளைகளால் மனநிறைவு கிடைக்கும். மரியாதை உயரும். தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். திருமணம் கைக்கூடும்.

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம்,மனநிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்களுக்கு வந்த பிரச்சனை விலகும். 

கும்பம்: 

கும்ப ராசி காரர்களுக்கு குருவின் மாற்றம், எல்லாம் நிறைந்த நல்ல நாளாகத்தான் இருக்க போகின்றது. கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வரும். முன் கோபம் வரும் போது மனதை அமைதிப்படுத்த தியானம் செய்து பழகுங்கள். எதிலும், முன்னேற்றம் இருக்கும். 

மீனம்: 

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றம், அவசியம் தேவை. உங்களுடைய வேலையை முன் பின் நேரமானாலும், நீங்களே செய்து முடித்து விடுங்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். எப்பவும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொட்டது துலங்கும். வாழ்வில் வெற்றி நிச்சயம்.

 மேலும் படிக்க...Budhan Peyarchi: புதனின் வக்ர பெயர்ச்சியால்...இரட்டிப்பு அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!
Summer Flowers: கடவுளுக்குப் பூக்கள்.! வீடு முழுவதும் வாசம்.! கோடையில் பால்கனியில் வளர்க்க ஏதுவான 6 செடிகள்.!