
ஒருவரின் வாழ்வில் அன்பான துணை, காதல், ரொமான்ஸ் இல்லாவிட்டால் அந்த வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. பெரும்பாலான நபர்கள் அடுத்தவர்களை ஈர்ப்பதில் அல்லது கவர்வதில் அதிக ஆர்வம் உடையவர்களா இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் கண்களின் ஏற்பு விசையால் நம்மை, அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
ஜோதிட கணிப்பில் படி, சந்திரனின் நிலையும், தாக்கமும் ஒரு ராசியில் ஒரு நபரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கின்றன. மேலும், ஒரு நபரின் எதிர்காலத்தையும், அவர் வாழ்வில் அன்பின் பிணைப்பையும் பற்றி இதன் மூலம் அறியலாம். அப்படியாக அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களை எளிதில் கவரும் வசீகர தோற்றம் உடையவர்கள். உங்கள் ராசிக்கு காதல் கைகூடும். ரிஷப ராசிக்காரர்கள் உங்கள் காதலி அல்லது காதலனிடம் உங்கள் மனதில் உள்ள அன்பை தெரியப்படுத்துங்கள். அதே சமயம் திருமணமானவரின் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும். துணையுடன் உறவு வலுப்பெறும். இந்த ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும்.
சிம்மம்:
வீட்டில் திருமணம் பற்றிய பேச்சு நடந்துகொண்டிருந்தால், உங்கள் காதலை பெற்றோரிடம் சொல்ல வெண்டிய நேரம் இதுவாகும். உங்களுக்கு இந்த நாள் சாதகமாக இருக்கலாம். தாமதிக்காமல், காதலன் / காதலியை விரைவில் பெற்றோர்கள் சந்திக்கும் வாய்ப்பு உருவாக்குங்கள். அப்படி செய்தால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே அன்பு நுறு மடங்கு அதிகரிக்கும்.
மகரம்:
முரட்டு சிங்கிளாக இருந்து திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். இந்த நாளில் உங்கள் காதல் வாழ்கை பற்றி புதிய யோசனை வரலாம். நீங்கள் விரும்பும் துணையைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. வாழ்வில் மகிழ்ச்சியை தட்டி எழுப்ப பொன்னான வாய்ப்பாக இருக்கும்.
கும்பம்:
கும்பம் கும்ப ராசி நேயர்கள் மிகவும் தன்னிச்சையானவர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் ஆளுமை குணம் ஒளிரும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறார்கள். உங்கள் காதலை திருமணம் என்னும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல விரும்பினால், இந்த நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.