
ரிஷப ராசியில் புதனின் பிற்போக்கு இயக்கத்தால், எந்த ராசிக்காரர்களின் சிறப்பான பலன்களை பெறுவார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவற்றுக்கு காரணமான புதன் கிரகம் வரும் மே 10-ம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க ஆரம்பித்து, ஜூன் 3 ஆம் திகதி வக்ர நிவர்த்தியாகி முற்போக்கு நிலையில் மாறி பயணிப்பார். இது சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தர உள்ளது.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு எதிர்மறையான பேச்சுகள் கிடைக்கும். உங்களுக்கு கொஞ்சம் பொறுமை தேவை. எதிலும், கோபப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். பிறரிடம் இருந்து செய்தி வரும். புதியதாக முயற்சிகளை மேற்கொள்ளலாம். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். மன கவலை இல்லாமல் சந்தோஷமாக வேலைகளை செய்து முடிப்பீர்கள். சொந்த தொழிலில் லாபம் பெருகும். ஆனால், சொல்லிக்கொள்ள பெரியதாக பிரச்சனை இல்லை.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதலான கவனம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியமாக செய்யக்கூடாது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதிக்க கூடிய நாளாக இருக்கும். கிடப்பில் போட்டு இருக்கும் வேலையை கையில் எடுங்கள். நிச்சயமாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். வாராக் கடன் வசூலாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
கன்னி:
கன்னி ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவாக இருக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக செலவழிக்க போகிறீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். நீங்கள் மனதில் எதை நினைத்தாலும் அதை உடனடியாக சாதிக்க போகிறீர்கள். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. குறிப்பாக உங்களுடைய வாழ்க்கைத்துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். எதுவாக இருந்தாலும் நாளை தள்ளிப் போடுங்கள். கொடுக்கல், வாங்கல் இல்லாமல் இருங்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். யாரைக் கண்டும் பயப்பட மாட்டீர்கள். யார் என்ன நினைத்தாலம் சிறப்பாக இருக்கும். மனதில் நினைப்பதை பட்டென்று பேசி நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். அதிர்ஷ்டக் காற்று வீசும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் லேசான மந்தமான சூழ்நிலை காணப்படும். வேலை செய்யுமிடத்தில் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கக்கூடிய நாளாக இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எச்சரிக்கை அவசியம். வீட்டு வேலை அலுவலக வேலை என்று கொஞ்சம் குழப்பம் இருக்கும். விடுமுறை நாள் என்பதால் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். இருப்பினும் பிரச்சனைகள் உங்களை விடாது. பெரிய அளவில் பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பில்லை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.