
நீரழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், ஏற்படும் உடல் உபாதையாகும். இன்றைய நவீன கால கட்டத்தில், 40 வயதை கடந்த அனைவரையும், சர்க்கரை நோய் என்பது பொதுவாக உள்ளது.
நம்முடைய வாழ்க்கை முறையில், மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம், இவற்றை கட்டுப்படுத்தலாம். முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கம் போன்றவை, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது. இணையம் அதிக நேரம் பயன்படுத்தாமல் பார்த்து கொள்வது போன்றவை நம்முடைய சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக அமைகிறது.
வீட்டிலேயே சுகர் டெஸ்ட்:
இது போன்ற சூழ்நிலைகளில், நம்முடைய உடலினை கூடுதல் கவனத்துடன், பாதுகாப்பாக பார்த்து கொள்வது அவசியம். அவ்வாறு செய்வதே நாம் முழுமையான ஆரோக்கியத்தை அடைய ஒரே வழியாகும். எனவே, ஒவ்வொரு நாளும் நாம் சாப்பிடும் உணவு பொருள் எந்த உணவுகள், நம்முடைய உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறது. எந்த உணவுகள், நம்முடைய உடலுக்கு ரத்த சர்க்கரை அளவை கூட்டுகிறது என்பதை அறிந்து வைத்து கொள்வது அவசியம்.
ஆனால், இன்றைய பிஸியான வாழ்கை முறையில், அடிக்கடி மருத்துவமனை செல்வது என்பது நமக்கு சோர்வை ஏற்படுத்தும். அதேபோன்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை பாடாய் படுத்தும், கொரோனா முடிந்தபாடு இல்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி மருத்துவமனை செல்வதை குறைத்து கொள்வது அவசியம்.
எனவே, இது போன்ற சூழ்நிலைகளில் நாம் வீட்டில் இருந்த படியே சர்க்கரை அளவினை கண்டறியும் சாதனங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்:
இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் வீட்டிலேயே துல்லியமான இரத்த குளுக்கோஸ் அளவுகளை சரிபார்க்க உதவும் வசதிகளை வழங்குகிறது. இதனால் நீங்கள் மருத்துவமனைகளுக்கோ அல்லது இரத்த பரிசோதனை நிலையங்களுக்கோ அடிக்கடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இந்த பரிசோதனைக் கருவிகளை வாங்குவதன் மூலம், வீட்டிலேயே இரத்த சர்க்கரையை பரிசோதித்து,உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
உங்கள் இரத்த சர்க்கரையை வீட்டிலேயே சரியான முறையில் பரிசோதிப்பதற்கான சில ஆலோசனைகள் இங்கே...
1. முதலில் நீங்கள் வாங்கும் இரத்த குளுக்கோஸ் அளவுகளை சரிபார்க்க உதவும், பரிசோதனைக் கருவிகள் பிராண்டட் தான என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், பொதுவான தயாரிப்புகள் தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும், அது நீரிழிவு நோயாளிகளுக்கு இறுதியில் ஆபத்தானதாக இருக்கும்.
2. இரத்த பரிசோதனைக் கருவியை வாங்கும் போது, தொழில்நுட்பம் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் நீங்கள் மருத்துவரிடம் கேட்டு, தெளிவு பெற்றிருக்க வேண்டும்.
4. பரிசோதனைக்கான கீற்றுகளை வாங்கும் போது, உங்கள் சாதனத்துடன் பொருந்திப் போவதை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. காலை சாப்பிடுவதற்கு முன்பு எவ்வளவு இருக்கிறது. சாப்பிடத்தற்கு பின்பு எவ்வளவு இருக்கிறது என்பதை நாள்தோறும் குறித்து வைத்து கொள்ளுங்கள். அதேபோன்று, எப்பொழுதும் சோதனைக் கருவியை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.எங்கு சென்றாலும், எடுத்து செல்லுங்கள்.
4. இரத்த பரிசோதனைப் பகுதியில்உங்கள் இரத்தத்தை விடும்போது, சரியான அளவு இரத்தத்தை விடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். போதுமான இரத்தம் இல்லையென்றால், சில சமையம் அது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
5. நீங்கள் சற்று வலியைக் குறைக்க விரும்பினால், விரல் நுனிக்குப் பதிலாக, இரத்தம் எடுக்க, விரலின் பக்கத்தைப் பயன்படுத்தவும். அதேபோன்று, உங்கள் சோதனை சாதனத்தை நேரடி சூரிய ஒளி இல்லாத குளிர், உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
6. இரத்த சர்க்கரை பரிசோதனைக்கு முன் எப்போதும் உங்கள் கைகளை நன்றாக கழுவவும். முடிவுகளை சேதப்படுத்தக்கூடிய, உங்கள் கைகளின் மேற்பரப்பில் உள்ள அனைத்து தூசி துகள்கள் மற்றும் அசுத்தங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.