Karumbu juice: கோடையில், உங்கள் உடல் சூடு அதிகமாக இருக்கும் போது, கரும்பு ஜூஸ், இளநீர் போன்ற பழச்சாறு குடிப்பது உடலுக்கு நல்லது. இவை உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், உடலில் நீர் பற்றாக்குறையிலிருந்தும் பாதுகாக்கும்.
கோடையில், உங்கள் உடல் சூடு அதிகமாக இருக்கும் போது, கரும்பு ஜூஸ், இளநீர் போன்ற பழச்சாறு குடிப்பது உடலுக்கு நல்லது. இவை உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், உடலில் நீர் பற்றாக்குறையிலிருந்தும் பாதுகாக்கும்.
கோடை காலம் வந்தாலே, சூரியனில் வெயில் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். அந்த சமயம் அடிக்கடி பசி இன்மையும், அதிக தண்ணீர் தாகம் ஏற்படுவதையும், நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இது போன்ற சூழ்நிலையில், இளநீர், கரும்பு ஜூஸ் போன்ற பழச்சாறு குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
அப்படி, நீங்கள் குடிக்கும் கரும்பு ஜூஸில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்:
இது உடலில் உள்ள அதிகப்படியான வெப்பநிலையைக் குறைக்க உதவும். கோடைக்காலத்தில் உடல் சூடு பிடிக்காமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸைக் குடிப்பது சிறந்தது.
கரும்பு சாற்றில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பல அமினோ அமிலங்கள் உள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் சிறந்தது.
1. உடனடி நிவாரணம்:
கரும்பில் உள்ள இயற்கையான சுக்ரோஸ் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்க உதவுகிறது. அதிக உஷ்ணத்தால் நீங்கள் சோர்வாக உணர்ந்தாலோ அல்லது உடலில் நீர் பற்றாக்குறை இருப்பது போல் தோன்றினாலோ, கரும்புச் சாறு உங்களுக்கு உடனடி தீர்வாகும்.
2. கல்லீரலுக்கு நன்மை பயக்கும்:
இது மஞ்சள் காமாலையை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. ஆயுர்வேதத்திலும், கரும்புச்சாறு மஞ்சள் காமாலை சிகிச்சையில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் கரும்புச் சாறு கல்லீரலை வலுவாக்க உதவுகிறது. கரும்புச் சாற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலை நோய்த்தொற்றுக்கு எதிராகப் பாதுகாக்கிறது மற்றும் பிலிரூபின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
3. சிறுநீரக பாதையை தூய்மையாக்கும் :
கரும்பு சாறு ஒரு டையூரிடிக் திரவம் என்பதால் அதை குடிப்பது உடலுக்கு நல்லது. இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றை தடுக்க உதவுகிறது. இது சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இது வீக்கம் மற்றும் சோர்வை நீக்க உதவுகிறது.
4. பற்களில் துவாரங்கள் பிரச்னைகளை சரி செய்யும்:
கரும்புச் சாற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால், பற்களின் பற்சிப்பிக்கு வலுவூட்டுவதால், புழுக்கள் வராமல் இருப்பதோடு, பற்களில் துவாரங்கள் பிரச்னையும் இருக்காது. இது தவிர, கரும்புச் சாறு வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவுகிறது.
5. மலச்சிக்கலை சரி செய்யும்:
கரும்பு சாற்றில் நிறைய மலமிளக்கி பண்புகள் உள்ளன.வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும். பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கரும்புச்சாறு செரிமானத்தை மேம்படுத்துகிறது, இதன் காரணமாக வயிற்றில் தொற்று ஏற்படாது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.