Sabudana khichdi: பெண்களுக்கு அளவில்லா நன்மைகளை அள்ளித்தரும் ஜவ்வரிசி...! ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்...

By Anu Kan  |  First Published Mar 12, 2022, 6:54 AM IST

Sabudana khichdi: பெண்களின் உடல் நலனுக்கு ஜவ்வரிசி மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.


பெண்களுக்கு கருவுறுதல், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக ஜவ்வரிசி உள்ளது.

ஒரு கப் ஜவ்வரிசியில் என்னென்னெ சத்துக்கள்  உள்ளது:

Tap to resize

Latest Videos

ஒரு கப் ஜவ்வரிசியில் 500  கிலோ கலோரிகள், 130 கிராம் மாவுச்சத்து, 1.36 கிராம் நார்ச்சத்து, 150 மி.கி. மேக்னீசியம், 90 கிராம் கார்போஹைட்ரேட்,16.7 மி.கி. பொட்டாசியம், 30.4 மி.கி. கால்சியம் ஆகியவை நிரமியுள்ளன. இது தவிர சிறிதளவு புரதம், கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து போன்றவையும் உள்ளன. இருப்பினும், கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே இதில் காணப்படும். எனவே, இவற்றை பால், காய்கறி மற்றும் கடலை பருப்புடன் சேர்த்து உட்கொள்வது நல்லது.

ஜவ்வரிசி கிச்சடி :

இந்த கிச்சடி பெரும்பாலும், வட மாநிலங்களில் விரதம் இருக்கும் பெண்கள் கடைபிடிக்கின்றனர். அவர்கள், காலை உணவாக ஜவ்வரிசி கிச்சடி செய்து உட்கொள்கின்றனர். நிறைந்த மாவுச்சத்து கொண்ட ஜவ்வரிசி உணவானது, பெண்களுக்கு விரத நாட்களில் உடலுக்கு தேவையான  ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.

தேவையான பொருட்கள்:

எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் 

கடுகு -1 டீஸ்புன் 

வரமிளகாய்  -1 டீஸ்புன் 

உளுத்தம் பருப்பு  -1 டீஸ்புன் 

கடலைப் பருப்பு -  -1 டீஸ்புன் 

பெருங்காயத்தூள், 

நறுக்கிய இஞ்சி -1\2 கப் 

பச்சை மிளகாய் -1\2 கப் 

கறிவேப்பிலை -தேவையான அளவு 

வேர்க்கடலை -1\2 கப் 

செய்முறை:

முதலில் கடாயில்,  3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். 

பின்னர்,அவற்றில் பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பின்னர், அதில் ஜவ்வரிசியை கழுவி சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 2 நிமிடம் கிளறி விட வேண்டும். ஜவ்வரிசியானது நன்கு வெந்ததும், அதில் வேர்க்கடலையை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான ஜவ்வரிசி கிச்சடி ரெடி.

பெண்களின் உடலுக்கு என்னென்னெ நண்மைகளை வழங்கும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

1. மெனோபாஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றின்போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க வாரத்திற்கு ஒரு முறை ஒரு கப் ஜவ்வரிசி எடுத்துக்கொள்ளலாம். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் மாதவிடாயின் 4 வது அல்லது 5 வது நாளில் ஜவ்வரிசி  ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம்.

2. குழந்தை பெற விரும்பும் பெண்கள், கருவுறுதல் அளவை மேம்படுத்த. முட்டைகளை உறைய வைக்கத் திட்டமிடுபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை, நீங்கள் விரும்பிய நேரத்தில்  ஒரு கப் ஜவ்வரிசி உட்கொள்ளலாம்.

3. மாதவிடாய் நின்ற பிறகு, மாதவிடாய்க்கு சற்று முன்பு ஏற்படும் தலைவலி, அதிக சோர்வு ஏற்பட ஆரம்பித்தால், ஒரு கப் ஜவ்வரிசி எடுத்துக்கொள்ளலாம்.

4. மாதவிடாய்க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில், மற்றும் பசி இல்லாமல் இருக்கும் காலங்களில் மதிய உணவு நேரத்தில் தயிருடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

5. கருமுட்டை வலுவாக இருக்கும், மாதவிடாய் இல்லாத காலத்தில் ரத்தம் வெளியேறினால், அப்போது ஒரே ஒரு முறை ஒரு கப் ஜவ்வரிசி எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க.....Idly mavu: 10 நாள் கழிச்சும் முதல் நாள் சாப்பிடும் இட்லி போல்.... மாவு புளிக்காமல் இருக்க சிம்பிள் 5 டிப்ஸ்..!

click me!