அசைவ உணவை தவிர்க்க எண்ணம் இருந்தும் ஆசை விடவில்லையா? அப்போ இதப்படிங்க மொதல்ல..!!

By Dinesh TGFirst Published Sep 28, 2022, 5:03 PM IST
Highlights

இனிமேல் அசைவம் சாப்பிட்ட வேண்டாம், கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தை நிறுத்திவிடலாம் என்று நினைப்பவர்களை மனதில் வைத்து மட்டுமே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. இதில் அசைவம் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள், அசைவம் சாப்பிடலாமா? வேண்டாமா? போன்ற விவாதங்கள் எதுவும் இந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை. உடல்நலன் கருதி, உடல் பருமனை முன்னிட்டு ஒருசிலர் அசைவத்தை தவிர்க்க விரும்பக்கூடும், மற்றும் சிலர் சூழ்நிலை காரணமாகவும் அசைவ உணவுகளை வேண்டாம் என்று நினைக்கக்கூடும். அவர்கள் பயன்பெறும் வகையில் சில குறிப்பிட்ட டிப்ஸுகள் மட்டுமே இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ளது. அசைவ உணவுகளை தவிர்க்க முயலுபவர்கள் எளிமையான முறையில் அதற்கான வழிமுறைகளை அறியலாம்.
 

எண்ணத்தை உறுதி செய்ய வேண்டும்

சூழ்நிலை காரணமாகவும் அல்லது உடல்நலனை கருத்தில் கொண்டும் அசைவ உணவுகளை தவிர்க்க விரும்புவோர், அந்த எண்ணத்தை உங்களுடைய ஆழ்மனதில் பதிய வையுங்கள். உணவு என்பது நம் மனம் மற்றும் ருசியோடு தொடர்புகொண்டது. மனம் எதை ருசி என்று நினைக்கிறதோ, அதை நம்முடைய நாக்கு ‘ஆம்’ என்று ஏற்றுக்கொண்டுவிடும். அதனால் அசைவ உணவை தவிர்க்க விரும்பும் உங்களுடைய எண்ணத்தை, தங்களுடைய மனதுக்கு உறுதியாய் கூற வேண்டும். ”நான் சைவ உணவுகளை மட்டுமே உன்ன விரும்புகிறேன். அதற்கு நீ துணை நிற்க வேண்டும்” என்று உங்களுடைய மனதுக்கு நீங்கள் கட்டளை பிறப்பிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாம் சொல்வதை மனம் கேட்டால் மட்டுமே, நினைத்த காரியம் வெற்றி அடையும். 

சைவ உணவுகளை கண்டு பயப்பட வேண்டாம்

அசைவ உணவுகளை கிடைக்கும் சத்துக்கள் சைவ உணவுகளில் கிடைப்பதில்லை என்கிற பொதுக் கருத்து பலரிடையே நிலவுகிறது. இதை முக்கிய காரணமாக வைத்து, அசைவ உணவுகளை தவிர்க்க முயன்றும் முடியாமல் சிலர் இருக்கின்றனர். ஆனால் உண்மையில் அசைவ உணவுகளில் கிடைக்கும் சத்துக்கு இணையான சைவ உணவுகள் நிறைய உள்ளன. நவதானியங்கள், பச்சைக் கீரை வகைகள், சோயா சங்க்ஸ், கொட்டைப் பருப்பு வகைகள், உலர் பழ வகைகள் போன்றவை குறிப்பிட்டத்தக்க சத்துக்களை கொண்டுள்ளன. வேண்டிய சத்து கொண்ட உணவுகளை தேடி எடுத்து சாப்பிட்டு வந்தால், உடனடி பலன் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் ருசியின் அடிப்படையில் அசவைத்தை சைவ உணவுகளுடன் ஒப்பிடக்கூடாது. சைவ உணவுகளில் கிடைக்கும் ஆரோக்கியத்தின் வழியில், உங்களுடைய உணவு முறையை மாற்றுவது முயற்சிக்கு பலன் தரும்.

நினைத்த உடன் எதுவும் நடக்காது

அசைவ உணவை தவிர்க்க விரும்புவோர், அதை உடனடியாக நிறுத்திவிட முடியாது. இன்றைய காலத்தில் நம்மில் பலரும் தினமும் அசைவ உணவுகளை சாப்பிடக் கூடியவராக இருக்கிறோம். அவர்களுக்கு உடனடியாக அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து சைவ உணவு முறைக்கு மாறுவது மிகவும் கடினம். முடிந்தவரை ஒருநாள் விட்டு ஒருநாள் உணவு முறையை மாற்ற முயற்சிக்கலாம். இதனால் ஒரு மாதத்தில் 30 நாளாக இருந்த அசைவ உணவுப் பழக்கம், தானாகவே 15 நாட்கள் குறைந்துவிடுகிறது. ஒருவேளை வாரத்துக்கு 2 முறை மட்டுமே சாப்பிடுகிறோம் என்பவர்கள், வாரத்துக்கு 1 முறை என்று சாப்பிட துவங்குங்கள். வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிடுகிறோம் என்பவர்கள், மாதத்துக்கு ஒருமுறை என்று மாற்றிடுங்கள். இப்படியே படிப்படியாக செய்யப்படும் முயற்சிகளால், உங்களுடைய உடல் முழு சைவ உணவுகளை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளும்.

உடலுறவு மீதான வேட்கையை மட்டுப்படுத்தும் 5 மருந்துப் பழக்கங்கள்- இதோ பட்டியல்..!!

அசவை உணவுப் பழக்கத்தை நிறுத்த திணிக்கக்கூடாது

 உணவுப் பழக்கம் என்பது தனிநபர் உரிமை சார்ந்தது. எனினும் அசைவ உணவுப் பழக்கத்தை நிறுத்தும் எண்ணத்தை ஒருவர் மீது திணிப்பது தவறான செயலாகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சக குடும்பத்தாரை அசைவ உணவுகளை நிறுத்தச் சொல்லி வற்புறுத்துவதும் தவறு தான். அதேபோல நம்முடைய உணவு சார்ந்த புரிதலை மற்றவர்கள் மீது தவிர்ப்பதும் தவறு தான். இப்படி செய்யும் போது, அசைவ உணவுப் பழக்கத்தை விட்டுவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, அதை எண்ணத்தை கைவிட்டுவிட்டு தொடர்ந்து அசைவ உணவுகளை சாப்பிடத் தொடங்கிவிடுவர். உணவை சாப்பிடுவதும் வேண்டாம் என்று முடிவு செய்வது தனிநபர் சார்ந்த முடிவு மட்டுமே. அசைவ உணவுப் பழக்கத்தை ஒருவர் கைவிட முன்வரும் போது, அதற்கு ஆதரவு தரும் செய்திகளை மற்றவர்கள் கூறலாம். ஆனால் ஒரு உணவு முறையை மற்றொரு உணவுப் பழக்கத்துடன் ஒப்பிட்டு கூறுவது தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடும்.

உலகில் முடியாது என்று எதுவுமே கிடையாது

எவ்வளவு முயன்றும் அசைவ உணவுகளை விட முடியவில்லை என்று பலரும் நினைத்திருக்கக்கூடும். முடியவே முடியவில்லை என்று இவ்வுலகில் எதுவுமே கிடையாது. முடியும் என்பது தான் உண்மை. முயற்சியை நோக்கி நாம் பயணிக்கும் வழிமுறை மிகவும் முக்கியம். ஒரு இலக்கை அடைய நாம் முன்னெடுக்கும் முயற்சிகள் சரியாக இருக்க வேண்டும். அது உங்களுக்கு கைகூடி வந்தால், மன உறுதி பெறும். யாரும் உங்களை அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கவைக்க முடியாது. அந்த எண்ணத்தை நாம் வைராக்கியம் கொண்டு மனத்திற்குள் விதைத்தால் மட்டுமே, கை மேல் பலன் கிடைக்கும். சுவைக்கு அடிமையாகாமல் ஆரோக்கியத்தை மனதில் வைத்துகொண்டு இம்முயற்சிகளை மேற்கொண்டால், தீர்மானமாக நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்.

click me!