அழுக்கான காலுறைகளில் மறைந்திருக்கும் ஆபத்து..!!

By Dinesh TGFirst Published Sep 27, 2022, 5:10 PM IST
Highlights

பள்ளி, அலுவலகம், பார்டி என  வெளியுலகம் சார்ந்த தினசரி நடவடிக்கைகளுக்கு செல்லும் போது நாம் ஷூ அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் ஷூ அணிவதை ஒரு கவுரவமாக கருதுகிறோம். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களும், தொழில்ரீதியாக பணிகள் செய்வோரும் ஷூ அணிவதை கட்டாயமாகவுள்ளது. 
 

மேலைநாடுகளில் ஷூ என்பது குளிர்காலத்தை மனிதர்கள் தாங்கிக்கொள்வதற்காக கண்டுப்பிடிக்கப்பட்டது. வெறும் கால்களில் ஷீ அணிய முடியாது என்பதால், அதற்காக காலுறைகள் தயாரிக்கப்பட்டன. அப்போது தான் கால்களும் பாதுகாப்பாக இருக்கும், வெளிப்புற தொடர்புகள் கால்களை பாதிக்காமல் இருக்கும். 

ஷூவை போன்றே, காலுறைகளையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாக்ஸ் அணிவதால் பாதங்களின் சருமதுக்கு அது பாதுகாப்பாக இருக்கின்றன. அதனால் எப்போது சாக்ஸுகளை நாம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். எப்போது சாக்ஸ் அணிந்தாலும், சில மணி நேரங்களில் கால்களில் ஈரம் படியும். 

பித்தப்பையில் கல் வராமல் தவிர்ப்பது எப்படி- இயற்கை வழியில் தீர்வு..!!

அதை தொடர்ந்து துவைக்காமல் போட்டு வந்தால், ஈரம் காரணமாக காலுறைக்குள் பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் பெருகும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கால் சருமத்தில் ஒவ்வாமை, அரிப்பு, கொப்பளங்கள் உள்ளிடவை உருவாகும். ஒருவேளை கொப்பளங்கள் உடைந்து ரத்தம் வந்தால், பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் அந்த புண் வழியாக உடலுக்குள் பரவும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கால்களை இறுக்கமாக அணியக்கூடாது. அது ரத்தவோட்டத்தை பாதிக்கும். அதேபோன்று குழந்தைகள், சிறார்கள், பள்ளி மாணவர்கள் அணியும் காலுறைகளை அவ்வப்போது துவைத்து விடுவது நல்லது. காரணம், அவர்களில் பலரும் மண்களில் விளையாடுவார்கள். மண் ஷூ வழியாக கால்களில் சென்றுவிடும். இது பாதங்களில் சிராய்ப்பு மற்றும் கொப்பளங்களை ஏற்படுத்தும். 

எப்போதும் குழந்தைகள், சிறார்கள், மாணவர்கள் வீட்டுக்கு வந்ததும் உடனடியாக சாக்ஸை உதறி துவைத்து வைத்து பயன்படுத்தி வாருங்கள். நாம் அணியும் அழுக்கு சாக்ஸ் வழியாக வெரூகா பிளாண்டாரிஸ் என்கிற வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றன. ஒருவேளை விழுப்புண், வெட்டுக்காயம் போன்றவை உங்கள் பாதங்கள் இருந்தால், குறிப்பிட்ட இந்த பாக்டீரியா உடலுக்குள் புகுந்து பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு காலுறைகளை நாம் அணிந்திட வேண்டும். மிகவும் கனமான காலுறைகள் அணிவது தவறு. இதன்காரணமாகவும் உங்களுடைய கால்களில் புண் உருவாகும். மேலும் வியர்வை சுரப்பிகள் பாதிக்கக்கூடும். மிருதுவான பருத்தியினாலான காலுறைகள் அணிவது நல்லது. அதேபோன்று சாக்ஸுடன் வீட்டுக்குள் உலா வருவது, மணலில் நடப்பது போன்றவற்றை செய்யாதீர்கள். உங்களுடைய குழந்தைகளையும் இதுபோன்று செய்வதற்கு அனுமதிக்காதீங்கள். 

click me!