விந்து வெளியேறுகையில் ரத்தம் கசிந்தால் என்ன செய்வது?

By Dinesh TGFirst Published Sep 27, 2022, 2:04 PM IST
Highlights

உடலில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குறைபாடுகளை உடனுக்குடன் மருத்துவரிடம் அணுகி தீர்வு பெறுவது முக்கியம். அதேபோன்று அந்தரங்க உறுப்புகள், அதனுடைய செயல்பாடுகளில் ஏற்படும் பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு மருத்துவரிடம் உரிய விளக்கம் பெற வேண்டும். அந்தரங்க பகுதிகளை பராமரிப்பதில் பெண்களை விடவும் ஆண்கள் சற்று பின்தங்கி தான் உள்ளனர். 
 

உடலில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குறைபாடுகளை உடனுக்குடன் மருத்துவரிடம் அணுகி தீர்வு பெறுவது முக்கியம். அதேபோன்று அந்தரங்க உறுப்புகள், அதனுடைய செயல்பாடுகளில் ஏற்படும் பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு மருத்துவரிடம் உரிய விளக்கம் பெற வேண்டும். அந்தரங்க பகுதிகளை பராமரிப்பதில் பெண்களை விடவும் ஆண்கள் சற்று பின்தங்கி தான் உள்ளனர். 

அந்த வரிசையில் விந்துணுக்களில் இருந்து ரத்தம் கலந்து வெளியேறும் பிரச்னை இருக்கும் ஆண்கள், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுபோன்ற பிரச்னையில் சில ஆபத்தும் உள்ளது என்று மருத்துவர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இன்னும் இதுகுறித்து விரிவாக தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பொதுவாகவே ஆண்களுக்கு விந்து திரவத்தில் இருந்து ரத்தம் வெளியேறுவது பரவலாக காணப்படுகிறது. பலரும் இதை புற்றுநோய் பாதிப்பாக இருக்கக்கூடுமோ என்கிற அச்சம் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் இது புற்றுநோய் பிரச்னையாக இருக்க 95 சதவீதம் வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

ஆண்களின் அந்தரங்க உறுப்பு அமைந்துள்ள பகுதியில் சைமினல் வெஸ்கையில் என்கிற சுரப்பி காணப்படுகிறது. இதில் அவ்வப்போது ரத்தக்கட்டிகள் ஏற்படுவதுண்டு. அது கரையும் போது, உங்களுடைய விந்து திரவத்தில் இருந்து ரத்தம் வெளியாகும். சில நேரங்களில் ரத்தம் உறைந்து விந்து கருஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிக்கலாம்.

பாரம்பரியமாகவே குளிக்காமல் இருந்து வரும் விசித்திர பழங்குடியின மக்கள்..!!

இதுபோன்ற பிரச்னைகள் தென்படும் போது, உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். அப்போது முதலில் புற்றுநோய்க்கான பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முயலுவார்கள். ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதால், குறிப்பிட்ட பரிசோதனை மெற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை பிரச்னை எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டால், மருத்துவர் தரப்பில் ஆண்டி பயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார்.

பிரசவத்துக்கு பிறகு எப்போது தம்பதிகள் உறவில் ஈடுபடலாம்..?? மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!!

குறிப்பாக 35 வயதுக்கு அதிகமான ஆண்களுக்கு விந்துணுவில் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. முதலாவதாக மருந்து சாப்பிட்ட உடன் இந்த பிரச்னை நின்றுவிடக்கூடும், ஆனால் மீண்டும் இது வரக்கூடும். சரியான மருத்துவம் மூலமாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
 

click me!