உடலுறவு மீதான வேட்கையை மட்டுப்படுத்தும் 5 மருந்துப் பழக்கங்கள்- இதோ பட்டியல்..!!
குறிப்பிட்ட சில மருந்துகளை உட்கொள்வது உடலுறவு சார்ந்த வேட்கையை குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதன் மூலம், செக்ஸ் சார்ந்த உந்துதலை சமநிலையில் வைத்திருக்க முடியும். அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் அனைவருக்கும் செக்ஸ் குறித்து பேசுவது மிகவும் பிடிக்கும். இன்றைய காலத்தில் செக்ஸ் மற்றும் அதுசார்ந்த பிரச்னைகள் குறித்து பல்வேறு தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால் உடலுறவு குறித்த ஆய்வுகளும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், உடலுறவு சார்ந்த வேட்கை ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் இடையில் குறைந்து காணப்படுவதாக முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு உள் மற்றும் வெளிப்புற காரணிகள் பாலியல் ஆசை குறைவதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடல்நலப் பிரச்னை சார்ந்து நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள், பாலியல் சார்ந்த சிந்தனைகளை மட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது. காரணமில்லாமல் சில மருந்துகளை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாதாரண உடல்வலிக்கு வலி நிவாரணிகளை எடுப்பது உடல்நலனை பெரியளவில் பாதிக்கும். அந்தவகையில் சிறந்தமுறையில் பாலியல் இன்பம் பெற, நாம் தவிர்க்க வேண்டிய 7 மருந்துகளை தொடர்ந்து பார்க்கலாம்.
வலி நிவாரணிகள்
உடல் உழைப்பு கொண்டவர்களை விடவும், பெரியளவில் உடல் உழைப்பில்லாதவர்கள் தான் வலி நிவாரண மருந்துகளை அதிகளவில் உட்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திடீரென உடலில் உழைப்பு அதிகமாகும் போது, அதை போக்குவதற்கு உடனடியாக வலி நிவாரண மருந்துகளை உட்கொள்ளும் பழக்கம் அதிகமானோரிடம் காணப்படுகிறது. உடல் அமைப்பில் சில மாற்றங்கள் நேரும் போது, அப்போது உடல் சில பணிகளை மேற்கொள்ளும். அதன்காரணமாக வலி ஏற்படக்கூடும். அப்போது அதை தடுக்க முற்படுவது இயற்கை முறைக்கு எதிரானது. அவசியமில்லாமல் நாம் செய்யும் இந்த பிரச்னை உங்களுடைய எதிர்காலத்தையே பாதிக்கச் செய்துவிடும்.
மனநலம் சார்ந்த மருந்துகள்
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருந்துகள் பாலியல் இச்சையை கட்டுப்படுத்திவிடுகின்றன. பொதுவாக மனச்சோர்வுக்கு சாப்பிடும் சாதாரண மருந்து கூட, உடலுறவில் ஆர்வத்தை இழக்கச் செய்துவிடுவது தெரியவந்துள்ளது. தாமதமாக உச்சநிலையை அடைதல், தாமதமாக விந்துவெளியேறுதல் போன்ற பிரச்னைகளுடன் பாலியல் இன்பத்தில் உச்சநிலையை அடையாமல் போவது, விந்து வெளியேற்றம் தடைபடுவது போன்றவையும் அடங்கும். ஒவ்வொரு உடல் அமைப்பு மற்றும் எதிர்ப்புச் சக்தி திறனுக்கு ஏற்றவாறு அறிகுறிகளில் மாறுபாடு இருக்கும். பொதுவாக மனநலம் சார்ந்த மருந்துகளை எடுப்பதால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை பாதிப்பு அதிகளவில் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கருத்தடை மாத்திரைகள்
பெண்களுக்கு உடலுறவு மீதான ஈடுபாடு குறைவதற்கு கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது முக்கிய காரணமாக உள்ளது. உடலுறவுக்கு முன்னும் பின்னும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும் போது, அது அவர்களுடைய பாலியல் சார்ந்து இயங்கும் ஹார்மோன்களில் செயல்பாட்டை குறைத்து விடுகிறது. இது தற்காலப் பிரச்னைக்கு தீர்வாக தோன்றினாலும், எதிர்காலத்தில் மேலும் பிரச்னைகளுக்கு வித்திடும். உங்களுக்கு பாலியல் மீதான ஈடுபாடு குரைவது போன்று இருந்தால், நீங்கள் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை நிறுத்திவிடுங்கள். அதை தொடர்ந்து உடலுறவு மீது வேட்கை அதிகரிக்கவில்லை என்றால், உரிய மருத்துவரை சந்தித்து விளக்கம் பெறுவது உசிந்தமாக இருக்கும்.
கட்டுப்பாடு இல்லாமல் தோன்றும் காம உணர்வுகள்- என்ன செய்யலாம்?
இரத்த அழுத்தம் சார்ந்த மருந்துகள்
உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், விரைவாகவே பாலியல் செயலிழப்பை எதிர்கொள்ளலாம். அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, உயர் ரத்த அழுத்தம் சார்ந்த மாத்திரைகளும் உடலுறவு மீதான வேட்கையை குறைக்கக்கூடும். ஆண்கள் ரத்த அழுத்தத்துக்கு வேண்டி மாத்திரைகள் சாப்பிடும் போது விறைப்புதன்மை, விந்து வெளியேற்றம் போன்ற செயல்பாடுகளில் பிரச்னையை சந்திக்கலாம். உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு கொண்ட பெண்கள், அதற்கான மருந்தை சாப்பிடும் போது பெண்ணுறுப்பு வறண்டு காணப்படுதல் மற்றும் உச்சநிலையை அடைவதில் சிரமம் போன்ற பிரச்னைகளை சந்திக்கலாம்.
பிரசவத்துக்கு பிறகு எப்போது தம்பதிகள் உறவில் ஈடுபடலாம்..?? மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!!
சுவாசக் கோளாறு மருந்துகள்:
தும்மல், நுரையீறல் பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், நுரையீறலில் தண்ணீர் சேர்வது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது, அதற்காக உட்கொள்ளும் மருந்துகள் உடலுறவு மீதான ஆர்வத்தை குறைக்கக்கூடியதாக உள்ளது. மேலும் ஒவ்வாமை சார்ந்த மருந்துகளும் பாலியல் ஆர்வத்தை மட்டுப்படுத்தி விடுகிறது. குறிப்பிட்ட இந்த மருந்துகள் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அல்லது விந்து வெளியேற்றத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். பெண்களுக்கு யோனிப் பகுதி வறட்சியாக இருக்கும்.
மேலே கூறப்பட்ட மருந்துகள் அனைத்தும் நாள்பட்ட நோய் பாதிப்புக்கானவை அல்ல. ஒவ்வொரு பிரச்னைக்கும் இயற்கையான முறையில் நாம் தீர்வை அடைவதன் மூலம் மருந்து உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. நம்முடைய உடல் சார்ந்த செயல்பாடுகளை மாற்றிக்கொள்வது மற்றும் அதிகம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவையும் உடனடித் தீர்வுக்கு வழிவகுக்கும். உணவுப் பழக்கங்களிலும் மாற்றம் அவசியம். குறிப்பிட்ட பாதிப்புகளை கண்டறிந்து உணவுப் பழக்கங்களை பேணும் பட்சத்தில் சிக்கல் இல்லாத வாழ்வை அடையலாம்.