இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான மசாலா தோசை... ரெசிபி இதோ!!

By Kalai SelviFirst Published Sep 6, 2024, 6:30 AM IST
Highlights

Masala Dosai Recipe : இந்த கட்டுரையில், ருசியான மசாலா தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தினமும் காலை அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால் ஏதாவது வித்தியாசமான சுவையில் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில், இன்று உங்களுக்காக நீங்கள் விரும்பி சாப்பிடும் வகையில், ஒரு வித்தியாசமான தோசை ரெசிபி கொண்டு வந்துள்ளோம். அது வேற ஏதும் இல்லங்க, மசாலா தோசை தான்.

இந்த மசாலா தோசை சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும் முக்கியமாக இது செய்வது மிகவும் எளிது. உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும், சூப்பரான மசாலா தோசை செய்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தோசை ஒரு முறை செய்து கொடுங்கள். எக்ஸ்ட்ரா ரெண்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், ருசியான மசாலா தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  உடல் எடை குறையனுமா? உங்களுக்கான சத்தான தோசை.. டேஸ்ட் செமையா இருக்கும்!

மசாலா தோசை செய்ய தேவையான பொருட்கள் :

தோசை மாவு - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
முந்திரி - 5
இஞ்சி - 1 சின்னது  (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  வீட்ல கோதுமை மாவு இருக்கா? 10 நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான டிபன் ரெடி!

செய்முறை :

மசாலா தோசை செய்ய முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின்னர் மசித்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அது சூடானதும் அதில் எடுத்து வைத்த தோசை மாவை ஒரு கரண்டி ஊற்றுங்கள் பிறகு அதன் மேல் ஒரு தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி நன்கு மொறுமொறுப்பானதும், தோசையின் நடுப்பகுதியில் தயாரித்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும். பிறகு தோசையை மடித்து எடுக்கவும் அவ்வளவுதான் டேஸ்ட்டான மசாலா தோசை ரெடி. இந்த தோசைக்கு நீங்கள் சாம்பார், தேங்காய் சட்னி,  கொத்தமல்லி சட்னி ஆகியவை வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!