தினமும் 4 பல் பூண்டை இப்படி சாப்பிடுங்க! ஆண்களின் பாலியல் பிரச்சனை முதல்..பல பிரச்சனைகளுக்கு குட் பை சொல்லுங்க

By Kalai Selvi  |  First Published Jul 9, 2024, 12:55 PM IST

Roasted Garlic Benefits For Men : இந்த கட்டுரையில் வறுத்த பூண்டை ஆண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.


பூண்டு ஒரு சூப்பர் ஃபுட் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரண்டு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் குணமாகும். பூண்டு சாப்பிடுவது அனைவருக்கும் நன்மை பயக்கும். 

இதையும் படிங்க: வெங்காயமும், பூண்டும் அதிகம் சாப்பிட்டால் பாலியல் ஆசை அதிகரிக்குமா..? உண்மை என்ன..?

Tap to resize

Latest Videos

ஆனால், ஆண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா? பூண்டு ஆண்களுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூண்டில் இருக்கும்  மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, ஆண்கள் வறுத்த பூண்டை சாப்பிட்டு வந்தால் அதன் நன்மைகள் பன்மடங்கு அதிகரிக்குமாம். எனவே, இந்த கட்டுரையில் வறுத்த பூண்டை ஆண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  என்னங்க சொல்றீங்க! பூண்டை வறுத்து சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

வறுத்தப்பூண்டை ஆண்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • வறுத்த பூண்டை ஆண்கள் சாப்பிட்டு வந்தால் அது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும், இதயம் தொடர்பான பல வகையான பிரச்சனைகளின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். 
  • வறுத்த பூண்டை சாப்பிடுவதால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள்,பூண்டை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்தப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ள ஆண்கள் வறுத்த பூண்டை Everything வந்தால், உயர் ரத்த அழுத்த பிரச்சனை குறையும்.
  • வறுத்தப்பூண்டை சாப்பிடு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். அத்தகைய சூழ்நிலையில், ஆண்கள் அதை தினமும் சாப்பிட்டு வந்தால் வைரஸ், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தாலோ அல்லது உங்கள் ஆற்றல் அளவு குறைவாக இருந்தாலோ, பூண்டை பச்சையாகவோ அல்லது வறுத்து சாப்பிடுங்கள். வறுத்தப்பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அதிக நன்மை கிடைக்கும்.
  • உங்களுக்கு ஏதேனு. பாலில் பிரச்சனை இருந்தால் வறுத்தப்பூண்டை சாப்பிடுங்கள். இது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்கிறது. இது பாலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தாது. 
  • டிஎன்ஏவை செய்தப்படுத்தும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீரேடிக்கல்களில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது. பூண்டில் துத்தநாக மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அதிகபட்ச நன்மைகளை பெற, ஆண்கள் தினமும் மூன்று பூண்டு வறுத்து சாப்பிட வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!