Daily Morning Walking Benefits : தினமும் காலையில் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நாம் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் காலையில் நடைப்பயிற்சி செய்வதும் மிகவும் அவசியம். மேலும், தினமும் காலையில் சுத்தமான காற்றில் நடந்தால் பல கடுமையான நோய்களை தடுக்கலாம் என்று பெரியவர்கள் பலமுறை சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா..? ஆனால், நம்மில் பலர் சோம்பேறி தனத்தால் காலையில் எழுவதில்லை.
இதையும் படிங்க: காலையில் சீக்கிரம் எழுவதற்கு இனி அலாரம் தேவையில்லை.. இந்த 4 விஷயங்களை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்!
எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?:
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள காலையில் நடைப்பயிற்சி மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றன. குறிப்பாக தொடர்ந்து 20 அல்லது 30 நிமிடங்கள் நடந்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்கின்றனர். எனவே, தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: உடல் எடையை கஷ்டப்படாமல் குறைக்கணுமா..? அப்ப தினமும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ங்க..
தினமும் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியம். இதற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டுமின்றி, தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். காலையில் சுத்தமான காற்றில் நடந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் பல வகையான நோய்களை தவிர்க்கலாம்.
2. மூட்டு வலியை போக்கும்: மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் நடை பயிற்சி செய்வது மிகவும் நல்லது. நிபுணர்களின் கூற்றுப்படி, நடைப்பயிற்சி மூட்டுகளுக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்குகிறது. இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் அவர்களை நன்றாக உணர வைக்கிறது.
3. எடை இழப்புக்கு உதவும்: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது. இதற்கு நீங்கள், கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். முக்கியமாக நீங்கள் எவ்வளவு வேகமாக நடக்கிறீர்களோ, அவ்வளவு கலோரிகள் எரிக்கப்படும் மற்றும் உங்கள் எடையும் வேகமாக குறையும்.
4. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்: தினமும் காலை நடைப்பயிற்சி செய்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதனால் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க முடியும்.
5. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது: நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் குறைந்தது 30 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். மேலும் நடைப்பயிற்சிக்கு பிறகு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். நீங்கள் தொடர்ந்து காலையில் நடைப்பயிற்சி செய்தால் அது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
6. பிபியை கட்டுப்படுத்தும்: நீங்கள் உயர் ரத்த அழுத்தத்தால் சிரமப்படுகிறீர்கள் என்றால், தினமும் காலையில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.