ராதிகா மெர்சன்ட் திருமண வைபோகம்.. தங்க ஜாக்கெட் அணிந்து கவனம் ஈர்த்த அஞ்சலி மெர்சன்ட் - யாருப்பா அவங்க?

Ansgar R |  
Published : Jul 08, 2024, 07:33 PM IST
ராதிகா மெர்சன்ட் திருமண வைபோகம்.. தங்க ஜாக்கெட் அணிந்து கவனம் ஈர்த்த அஞ்சலி மெர்சன்ட் - யாருப்பா அவங்க?

சுருக்கம்

Anant Ambani Wedding : பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் அவர்களது இல்லமான ஆண்டிலியாவில் தொடங்கியுள்ளது. வரும் ஜூலை 3ம் தேதி, பாரம்பரிய சடங்குகள் உள்ளடிக்கிய பிரமாண்ட விழா நடந்தது. அம்பானி, மெர்ச்சண்ட் மற்றும் மேத்தா குடும்பத்தினர் அனைவரும் கண்கவர் உடைகள் மற்றும் நகைகளை அணிந்து இதில் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், உலக அளவில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை அணிந்து, மில்லியன் கணக்கான மதிப்புள்ள நகைகளால் தங்களை அலங்கரித்த வண்ணம் வலம்வந்தனர். இருப்பினும், அனைத்து அனைவரது கண்களையும் ஈர்த்தது எளிமையான நகைகளும், ஆடம்பர உடையும் அணிந்திருந்த ஒரு பெண்மணி தான். 

ஐவிஎஃப் கர்ப்பம் பற்றி மனம் திறந்த இஷா அம்பானி.. இளம் பெண்கள் ஏன் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?

தனது கணவருடன் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அந்த பெண், பச்சை நிற பார்டர் கொண்ட பீச் நிற புடவையை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த புடவையில் பல நேர்த்தியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. உண்மையில் பலரது கவனத்தை ஈர்த்தது அவர் அணிந்திருந்த தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த ரவிக்கை தான். 

நகைகளை குறைவாக அணிந்திருந்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் அந்த பெண் அணிந்திருந்த தங்க ஜாக்கெட் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சரி யார் அந்த பெண்மணி என்றால், மணமகள் ராதிகாவின் அக்காஅஞ்சலி தான். 

யார் இந்த அஞ்சலி மெர்ச்சண்ட்?

விரேன் மெர்ச்சண்ட் அவர்களுடைய மூத்த மகள் தான் அஞ்சலி, கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் அமன் மஜிதியாவை மணந்தார். மருந்து நிறுவனமான ஆம்சல் கெம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், அஞ்சலி இயக்குநராக பணிபுரிந்தார். அஞ்சலி அவர்களின் நெட் ஒர்த் சுமார் 50 கோடி என்று குறிப்பிடப்படுகிறது. அதே நேரம் அவரது தந்தையில் சொத்து மதிப்பு சுமார் 800 கோடி என்று கூறப்படுகிறது.

Anant Ambani அனந்த் - ராதிகாவுக்கு துபாய் ஆடம்பர வில்லாவை பரிசளித்த அம்பானி குடும்பம்..திகைக்க வைக்கும் விலை.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்