- Home
- Gallery
- Anant Ambani ஆனந்த் - ராதிகாவுக்கு துபாய் ஆடம்பர வில்லாவை பரிசளித்த அம்பானி குடும்பம்..திகைக்க வைக்கும் விலை.
Anant Ambani ஆனந்த் - ராதிகாவுக்கு துபாய் ஆடம்பர வில்லாவை பரிசளித்த அம்பானி குடும்பம்..திகைக்க வைக்கும் விலை.
முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தங்கள் மகன் ஆனந்த் அம்பானி - மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் இதே போல ஆடம்பர பரிசை வழங்கி உள்ளனர்.

பிரபல தொழிலதிபரும் பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆடம்பர வாழ்க்கை மற்றும் விலை மதிப்புமிக்க பரிசுகளை வழங்குவதற்காகவும் அடிக்கடி தலைப்பு செய்திகளில் வலம் வருகிறது. அந்த வகையில் தங்கள் மருமகள் ஷ்லோகா மேத்தாவுக்கு ரூ.451 கோடி மதிப்புள்ள நெக்லஸை நீதா அம்பானியும் முகேஷ் அம்பானியும் பரிசாக வழங்கினர்.
அதே போல் தங்கள் பிள்ளைகளுக்கும் விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் பாரம்பரியத்தை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தங்கள் மகன் ஆனந்த் அம்பானி - மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் இதே போல ஆடம்பர பரிசை வழங்கி உள்ளனர்.
ஆனந்த் மற்றும் ராதிகாவிற்கு துபாயின் பாம் ஜுமேராவில் ஒரு சூப்பர் ஆடம்பர வில்லாவை அம்பானிகள் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த வில்லாவின் மதிப்பு ரூ.640 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Ambani Family
3,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த வில்லா துபாயில் மிகவும் விலையுயர்ந்த சொத்துக்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இந்த சொகுசு மாளிகையில் 10 விசாலமான மற்றும் பிரமிக்க வைக்கும் படுக்கையறைகள், 70 மீட்டர் தனியார் கடற்கரை மற்றும் செழுமையான உட்புறங்கள் உள்ளன. இந்த வீடு நேர்த்தியான கலைப்படைப்பு, இத்தாலிய பளிங்கு, உயர் கூரைகள் மற்றும் ஒரு தனியார் குளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Ambani family
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் 12-ம் தேதி கோலாகலாமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே 2 ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது 3வது ப்ரீ வெட்டிங் விழாக்கள் கோலாகலமாக நடந்து வருகிறது. அனந்த் - ராதிகாவின் திருமண விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.