இந்த 4 பொருட்களை பாலுடன் சேர்த்து குடிக்காதீங்க.. உடலில் பல பிரச்சனைகள் ஏற்படலாம்..

By Ramya s  |  First Published Jul 3, 2023, 9:47 AM IST

பாலில் சில பொருட்களை சேர்த்து குடிப்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. எனவே பாலுடன் சேர்த்து குடிக்ககூடாத பொருட்களை தற்போது பார்க்கலாம்.


பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அனைவரும் அதனை அருந்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பாலில் கால்சியம் மட்டுமல்ல, புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்களும் உள்ளன. இதன் காரணமாக உங்கள் எலும்புகள் வலுவடைவது மட்டுமல்லாமல், தசைகளை சரிசெய்து ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. எனினும் பாலில் சில பொருட்களை சேர்த்து குடிப்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. எனவே பாலுடன் சேர்த்து குடிக்ககூடாத பொருட்களை தற்போது பார்க்கலாம்.

உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் அரிசியை எளிதாக கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா?

Tap to resize

Latest Videos

சர்க்கரை

பாலில் சர்க்கரை சேர்ப்பது மிகவும் பொதுவானது. ஆனால் இன்னும், அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது சர்க்கரையின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும். இது அவர்களின் மன வளர்ச்சியை பாதிக்கிறது. மறுபுறம், பாலில் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படும் போது, அது உங்கள் கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, ஒரு நபருக்கு எடை அதிகரிப்பதால் நீரிழிவு போன்ற நிலைமைகள் ஏற்படலாம். எனவே, பாலில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

காஃபின் 

பலரும் காபி அல்லது டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் காபி அல்லது டீ உடலுக்கு நல்லதாகக் கருதப்படுவதில்லை. இது பாலில் இருந்து நீங்கள் பெறும் நன்மையை இழப்பது மட்டுமல்லாமல், அமைதியின்மை, தூக்கமின்மை, அதிகரித்த இதய துடிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சாக்லேட் சிரப் அல்லது சுவையூட்டப்பட்ட சிரப்

குழந்தைகள் சாக்லேட் பால் குடிக்க விரும்புகிறார்கள், எனவே அவர்களின் பாலில் சாக்லேட் சிரப் அடிக்கடி சேர்க்கப்படுகிறது. மறுபுறம், பெரியவர்கள் பாலை சுவையாக மாற்ற சந்தையில் பல்வேறு வகையான சுவையூட்டப்பட்ட சிரப் அல்லது தூள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த வகை சிரப்பில் நிறைய சர்க்கரை, செயற்கை நிறம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பது மட்டுமின்றி, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

செயற்கை இனிப்பு

ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் பாலில் சர்க்கரைக்குப் பதிலாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். இதைச் செய்வதன் மூலம், கலோரிகளின் எண்ணிக்கையை எளிதாகப் பராமரிக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் செயற்கை இனிப்புகளின் வழக்கமான அதிகப்படியான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுவதில்லை. சில ஆய்வுகள் செயற்கை இனிப்புகள் குடல் பாக்டீரியா மற்றும் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டுகின்றன. இது மட்டுமின்றி, உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக எடை கூடும் பிரச்சனையையும் இது ஏற்படுத்தும்.

“தண்ணீர் விரதங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.. ஆனால்..” புதிய ஆய்வில் வெளியான தகவல்..

click me!