சர்க்கரை நோய் இருக்கும் பெண்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாமா..??

By Dinesh TG  |  First Published Sep 7, 2022, 9:16 PM IST

எப்போதுமே கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில், பிரசவத்துக்கு முன்னதாக சர்க்கரை அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் அது குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் சர்க்கரை அளவு இயல்புநிலைக்கு திரும்பிவிடும். ஆனால் இயல்பாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக கொண்ட பெண்கள், பிரசவத்துக்கு பிறகு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா என்கிற ஐயம் பலரிடையே நீடிக்கிறது. இக்கேள்வி தொடர்பாக மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்த பதில் மற்றும் நடைமுறைக்கு தேவையான அம்சங்களுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
 


தாராளமாக கொடுக்கலாம்

தாய்பாலில் ஊட்டச்சத்து அதிகம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்துக்கு தாய் பால் இன்றியமையததாக உள்ளது. அதனால் எந்த தாயாக இருந்தாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை தராமல் இருக்க முடியாது. சர்க்கரை பாதிப்பு கொண்ட பெண்கள் தங்களுடைய குழந்தைக்கு தாய் பால் தரும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. இதன்காரணமாக பின்நாளில் குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாது என்பது கவனிக்கத்தக்கது. 

Latest Videos

ஆய்வுகள் மூலம் தெரியவந்த உண்மை

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் தெரிவித்துள்ளது. இது தாய்மார்கள் மற்றும் குழந்தைக்கு பல வகையில் பயனுள்ளதாக அமையும். உரிய மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு குழந்தைகளுக்கு தாய்மார்கள் பால் கொடுக்க துவங்கலாம். 

ரத்தச் சர்க்கரை அளவு

தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது, அவர்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு 90 முதல் 180 mg/dL இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை ரத்தத்தி குறைந்தளவிலான குளுக்கோஸ் இருந்தால், அது ரத்த சக்கரை குறைப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தாய்ப் பாலில் 50 மற்றும் 90 மி.கி வரை ரத்தம் குறையக்கூடாது.

 

தாய்பால் உற்பத்திக்கு பிரச்னையில்லை.

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, உங்களுடைய ரத்தத்தில் டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோய் போன்றவை இருந்தால், அதனால் தாய்ப்பால் உற்பத்தி பாதிக்கப்படலாம். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்களைக் காட்டிலும் டைப் 1 நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தில் இரண்டு மடங்கு அதிகரிப்பு உள்ளது என்று தெரியவந்துள்ளது. 

என்ன பிரச்சனை என்றே புரியவில்லையா? கவலை கொள்கிறீர்களா? - இந்த டிப்ஸ் உங்களுக்குதான்!

எனினும் தாய்ப்பால் தரும் பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ உலகம் கூறுகிறது. இதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு முலைக் காம்பில் அரிப்பு ஏற்படும். இதனால் தாய்ப்பால் கொடுக்கப்படுவது பாதிக்கப்படுகிறது. இதற்கு உரிய மருத்துவச் சிகிச்சை அவசியம். னினும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியம்.
 

click me!