உலகிலேயே அதிக நச்சுத்தன்மை கொண்ட மீன்களை பற்றி உங்களுக்கு தெரியுமா..??

By Dinesh TGFirst Published Sep 7, 2022, 8:48 PM IST
Highlights

இந்தியா போன்ற தீபகற்ப நாட்டில் கடல் உணவுகள் பிரதானமாக விளங்குகிறது. முக்கடல் சூழ்ந்திருக்கும் நமது தமிழ்நாடு கடல் பரப்பில் கிடைக்காத மீன்களே இல்லை எனலாம். அசைவ உணவுகளை ஆசையுடன் சாப்பிடும் பலருக்கும், கடல் உணவுகளின் மீது தனி விருப்பம் இருக்கும். எண்ணிலடங்கா மீன் வகைகள், நண்டுகள், ஈறால் என்று கடல் உணவுகளின் வகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். எனினும் கடல் உணவுகளை குறித்த புரிதல் கடலோரப் பகுதிகளை தாண்டி, பலருக்கும் இருப்பதில்லை. கிடைக்கும் கடல் உணவுகளை சமைத்து தின்று, தங்களது அசைவ உணவின் மீதான வேட்கையை தனித்துக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் கடல் உணவுகளில் விஷத்தன்மையுடன் கொண்ட மீன் வகைகள் பரவலாக காணப்படுகின்றன. அதுதொடர்பான ஒரு சிறுகுறிப்பு விவரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

கோள மீன்

ஆங்கிலத்தில் ’பஃபர் மீன்’ என்றால் எல்லோருக்கும் தெரியும். இலங்கை மக்கள் இதை பேத்தையன் என்கிறனர். இம்மீனுக்கு செதில் கிடையாது. ஆனல் உடல் முழுவதும் சிறிதும் பெரிதுமாக முற்கள் காணப்படும். ஜப்பான் கடல் பகுதியில் கோள மீன்கள் பரவலாக காணப்படுகின்றன. ஆனால் இதை சமைப்பதற்கு பக்குவம் உண்டு. அது ஜப்பானியர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த மீனின் உடலில் இருக்கும் முற்களில் விஷம் இருக்கும். அது மனிதனை தாங்கினால், 24 மணிநேரத்துக்குள் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. நஞ்சு மிகுந்த முட்களையெல்லாம் நீக்கிவிட்டு, இந்த மீனை ஜப்பானியர்கள் சமைத்து சாப்பிடுகின்றனர். கோள மீன் கொண்டு செய்யப்படும் ‘புகு சூப்’ ஜ்ப்பானி மிகவும் பிரபலம். ஜப்பானில் இந்த மீனை பக்குவத்துடன் வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சிப் பெற்று உரிமம் பெறும் சமையலருக்கு மட்டுமே ‘கோள மீன்களை சமைக்க அரசு அனுமதி வழங்குகிறது.

கல் மீன்

இதுவரை அறியப்பட்ட மீன்களில் நஞ்சின கொடியதாக கல் மீன் அறியப்படுகிறது. மனிதன் இந்த மீனை தொட்டால் பக்கவாதம் ஏற்படக்கூடும் என்கிற வகையில் ஆய்வுகள் நீள்கின்றன.  இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட கடற்பரப்பில் காணப்படும் இந்த மீன், சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற தீற்றலில் இருக்கும். கல் மீன்களில் மொத்தம் 5 வகைகள் உள்ளன. பவளப்பாறைகளும் ஆழ்கடல் பாறைகளுமே இதன் தங்குமிடம் என்றாலும் சில ஆறுகளிலும் இந்த அதிசிய மீன் வாழுகின்றன. நீச்சல் அடிப்பவர்கள் தெரியாமல் இந்த மீனை தொட்டுவிட்டாலோ அல்லது மிதித்துவிட்டாலோ அதோ கதி தான். முத்துக்குளிப்பவர்கள் இந்த மீனிடம் இருந்து தற்காத்துக் கொள்ள கனத்த அடிப்பாகமுடைய காலணிகளை அணிந்து, பாதங்களை மெல்லப் பதித்து நடப்பார்கள். சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் இம்மீன், ருசியான உணவாக உண்ணப்படுகிறது. வேக வைக்கும்போது, இதன் விஷத்தன்மை நீங்கிவிடுவதாக சொல்லப்படுகிறது.

சிங்க மீன்

இதற்கு உடல் முழுவதும் விஷ முட்கள் இருக்கும். எதிரி யாராவது தன்னை தாக்க வருவது தெரிந்தால், உடனே முட்களை அகல விரித்து தாக்கும் தன்மை கொண்டது. உடலில் இருந்து முட்களை விரிக்கும் போது பார்ப்பதற்கு சிங்கத்தின் முகம் போல தோன்றுவதால், இம்மீனுக்கு சிங்க மீன் என்று பெயர் வந்தது. பசிஃபிக் பெருக்கடலில் மட்டுமே காணப்பட்டு வந்த சிங்க மீன், கடந்த 1990-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஃபிளோரிடா முதல் ரோடே தீவு வரையில் அமைந்திருக்கும் கடல் பரப்பில் காணப்பட்டது. இதையடுத்து இம்மீன் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை எந்த நாட்டினரும் உண்பது கிடையாது. முட்களை நீக்கிவிட்டால் சிங்க மீனுக்கு சதைப் பிடிப்பு இருக்காது என்பது முக்கிய காரணமாக உள்ளது. தனது உடலில் இருக்கும் நஞ்சு கொண்ட முட்களை பயன்படுத்தி 20 மீன்களை வரை சாகடிக்கும் திறன் கொண்டது இச்சிங்க மீன் இனம்.

என்ன பிரச்சனை என்றே புரியவில்லையா? கவலை கொள்கிறீர்களா? - இந்த டிப்ஸ் உங்களுக்குதான்!
 

திருக்கை மீன்

இந்தியாவிலும் திருக்கை மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.  தட்டை வடிவ உடலும், நீள வாலும் கொண்ட உயிரினம் இது. தமிழ்நாடுகளில் மொத்தம் 22 வகையிலான திருக்கை மீன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் பூவாத் திருக்கை மீன் நஞ்சினும் கொடியது. இம்மீனை ஆராய்ச்சி செய்ய சென்றவர்கள் பலர், அதனுடைய வாலிலுள்ள நச்சுத்தன்மையுடன் கூடிய முள் குத்தி இறந்துபோயுள்ளனர். அதேபோன்று பெருந்திருக்கை மீன்களிலும் நச்சுத்தன்மை உள்ளது. ஆனால் அம்மீனின் வால் பகுதியை மட்டும் வெட்டிவிட்டு உணவுக்கு பயன்படுத்தலாம்.  இறால்களுக்கு விரிக்கப்படும் மடிவலைகளிலும், ஆழமான கடலில் நடக்கும் மீன்பிடியிலும் திருக்கைகள் அதிகம் பிடிபடுவது வழக்கமாக உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு கோடியக்கரையில் 1.75 டன் கொண்ட பெருந்திருக்கை மீனை நாகைப்பட்டினம் மீனவர்கள் பிடித்துள்ளனர். கடல்பரப்பில் இருக்கும் மண்ணுக்குள் புகுந்துகொண்டு இறைக்காக காத்திருக்கும். தப்புத்தவறி மனிதர்கள் யாராவது மிதித்துவிட்டால் அவ்வளவுதான்.

இது போன்று இன்னும் நஞ்சு மிக்க பல கடல் வாழ் மீன் இனங்கள் உள்ளது. மீனவர்கள் மற்றும் கடல் வாழ் ஆராய்ச்சியாளர்களுக்கு இவைகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளவது பெறும் சவாலாகவே உள்ளது. எனினும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை கருதி, இன்னும் கடல் வாழ் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

click me!