சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவு - ''திணை அடை''! இன்றே செய்து சாப்பிடுங்கள்!

By Dinesh TGFirst Published Sep 7, 2022, 12:14 AM IST
Highlights

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவுவாக திணை அரிசி பண்டங்கள் அமைந்துள்ளன. திணை அரிசி மூலம் அடை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
 

திணை அரிசி நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய சிறுதானிய உணவு வகைகளில் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படக்கூடிய தானியமும் திணை தான். திணை அரிசியில் புரதம், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தயாமீன், ரிபோப்ளோவின், நியாசின், மற்றும் அதிகப்படியான அமினோ அமிலங்களும் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட இந்த அரிசி நம் உடலுக்கு உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் செயல்படக்கூடியது.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவுவாக திணை அரிசி பண்டங்கள் அமைந்துள்ளன. திணை அரிசி மூலம் அடை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

ஒரு கப் திணை அரிசி

அரை கப் கடலைப்பருப்பு

கால் கப் உளுத்தம்பருப்பு

கால் கப் துருவிய தேங்காய்

ஒரு பெரிய வெங்காயம்

அரை கப் முட்டை கோஸ் நறுக்கியது

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை

மூன்று காய்ந்த மிளகாய்

அரை தேக்கரண்டி மிளகு

அரை தேக்கரண்டி சீரகம்

அரை தேக்கரண்டி பெருங்காயப் பொடி

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் நன்றாக சுத்தம் செய்த எள்ளு, கடலைப் பருப்பு உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்னர், மூன்றையும் தனித்தனியாக குருணை பதத்தில் அரைத்து ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்.

அதனுன் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கொத்து ஆகியவற்றை நைசாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

எல்லாவற்றையும் நன்றாக கலந்து சுமார் மூன்று மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். இதோடு அடை சுடுவதற்கான மாவு ரெடியாகிவிட்டது.

Water Poori : தண்ணீரில் பூரி சுடலாம் வாங்க! - ஆரோக்கியமாக சாப்பிடலாம் வாங்க!

அடை சுடுவதற்கு முன்பாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய முட்டைகோஸ், பெருங்காயப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில், தோசை கல் காய்ந்தவுடன் எண்ணெய் தடவி செய்து வைத்த மாவைக் கொண்டு அழகாக திணை அடை சுட்டு எடுக்க வேண்டும். திணை அடையுடன் தொட்டுக்கொள்ள எள் பொடி, இட்லி பொடி, மிளகாய் பொடி அல்லது அவியல் ரொம்ப சுவையாக இருக்கும்.

click me!