துக்க வீடுகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

By Dinesh TGFirst Published Sep 6, 2022, 8:58 PM IST
Highlights

துக்கம் நடந்த வீடுகளுக்கு, துக்கம் விசாரிக்க தனிமனித அறம் கொண்டு நடக்க வேண்டும். அவர்களுடைய ஒவ்வொரு செய்கையும் வீட்டைச் சேர்ந்தோரின் மனதை புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம். ஏற்கனவே இழப்பால் வாடி இருக்கும் அவர்களுடைய மனம், நம்முடைய தவறான செய்கையால் மேலும் நோகக்கூடும். ஒரு துக்கம் நடந்த வீட்டில் தனி மனித அறத்தை எப்படி பின்பற்ற வேண்டும் என்று நடைமுறை உள்ளது. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

இறப்பை காரணமாக்கி விடுவது

ஒரு சிலர் சாவை காரணமாக வைத்துக் கொண்டு தங்களுடைய இஷ்டத்துக்கு ஏதாவது செய்வார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புக்கு, உறவினர் முறையில் உள்ளவர்கள் மூக்க முட்ட குடித்துவிட்டு வருவதுண்டு. கூட்டத்தை தன் பக்கம் இழுக்கும் நோக்கில் கத்தி அழுவது, புரண்டு துடிப்பது, மேளம் அடிப்பவரிடம் சென்று அப்படி வாசி இப்படி வாசி என்று சொல்வது. தகாத வார்த்தைகளைச் சொல்லி துக்கத்துக்கு வந்தவர்களிடம் வம்பிழுப்பது.  இழப்பின் காரணமாக ஏற்பட்ட மது குடித்தேன் என்று கூறிவிட்டு புலம்புவது என்று சிலர் நடந்துகொள்ளும் விதம் தர்மசங்கடமாக அமையும். அப்படிப்பட்ட நபர்கள் சாவை கேடயமாக பயன்படுத்தி, வந்திருக்கும் கூட்டத்தினரிடையே ஆதாயம் தேடுவது தான் முக்கிய நோக்கமாக இருக்கும்.

காத்திருப்பு

துக்க நிகழ்ச்சி எவ்வளவு விரைவாக வரமுடியுமோ, அவ்வளவு விரைவாக வந்து இறந்துபோனவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது நம்முடைய மரபு. ஆனால் வெகு தூரத்தில் இருப்பவர்கள், அண்டை மாநிலங்களில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் நினைத்த நேரத்தில் துக்கத்துக்கு வர முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இறப்பு நடந்த வீட்டுக்கு அருகாமையில் இருந்துகொண்டு, அஞ்சலி செலுத்த காலம் தாழ்த்தக் கூடாது. அதேபோன்று முக்கியமான நபர் வரவேண்டும் என்று இறந்தவரிடன் உடலை காக்க வைப்பதும் தகாத செயலாகும். இறந்து வெகுநேரம் கழித்து மின்மயானங்கள், எரிமேடு மற்றும் கல்லறைகளுக்கு வரும் சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதில் சட்டரீதியாக சிக்கல் ஏற்படும் என்று கவனிக்கத்தக்கது.

போன் உடன் அஞ்சல்

கையில் போன் வைத்துக் கொண்டோ அல்லது யாருடனாவது போனில் பேசிக் கொண்டோ உடலுக்கு அஞ்சலி செலுத்துவது அவமரியாதையாகும். ஒருவேளை இறந்துபோனவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது போன் வந்தால், அதை தயவு செய்து சைலண்டில் போட்டுவிடுங்கள். பிறகு பேசிக்கொள்ளலாம். அதைவிடுத்து, போனில் பேசிக் கொண்டே, இறந்துபோனவருக்கு அஞ்சலி செய்வதெல்லாம் தனி மனித அறத்தை மீறும் செயலாகும். பலருக்கும் எந்த நேரத்தில் போன் பேசவேண்டும், எப்போது போன் எடுக்கக் கூடாது என்கிற புரிதலே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

திருமணத்துக்கு பிறகு கணவனிடம் எல்லாமே சொல்ல வேண்டுமா என்ன? பெண்களே உஷார்..!!

துக்கத்தால் துயரம்

மிகவும் நெருக்கமானவர்கள் இறந்துவிட்டால், ஒரு சிலர் தங்களை தாங்களே அடித்துக் கொண்டு காயப்படுத்துவது. துக்கம் தாளாமல் சுவற்றில் இடித்துக் கொள்வது. தலையில் பலமான அடித்துக் கொண்டு, உடல் இருக்கும் குளிரூட்டும் பெட்டியை தாக்குவது போன்ற கண்மூடித்தனமாக நடந்துக் கொள்ளக்கூடாது. இழப்பை ஈடுசெய்ய முடியாதது தான். ஆனால் அதை கையாள்வதில் தான் முதிர்ச்சி உள்ளது. அதேபோன்று  துக்கத்தை அடக்கிவைக்கவும் கூடாது.  உடனே கொட்டிவிட வேண்டும். ஆனால் எதிலும் கட்டுக்கோப்பாக இருந்துவிடுவது, நம்மை மனரீதியாக வலிமைப்படுத்தும்.

அரட்டைக் கூடாது

துக்கம் நடந்த வீட்டுக்கு விசாரிப்பது போல் வந்துவிட்டு, இறந்தவர் கடன் பெற்றிருந்தால் அதை நினைவுப்படுத்துவது தவறான செயலாகும். நெருங்கிய உறவினர்கள் முன் சண்டை, பகை காரணமாக இறந்தவருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தாமல் சாவுக்கே வராமல் அலட்சியப்படுத்து மகா கொடூரம். இறந்துபோனவர் குறித்து அவதூரான கருத்துக்களை பரப்புவது தனி மனித அறத்தை மீறிய செயலாகும்.

பெண்கள் குறித்து ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 8 விஷயங்கள்..!!
 

click me!