Water Poori : தண்ணீரில் பூரி சுடலாம் வாங்க! - ஆரோக்கியமாக சாப்பிடலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Sep 6, 2022, 7:47 PM IST
Highlights

பூரியை அடிக்கடி சாப்பிடலாம், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் எந்த பிரச்சனையும் வராது. எப்படி என்று கேட்கிறீர்களா? பூரியை எண்ணெயில் போட்டு எடுத்தால் தானே பிரச்சனை, தண்ணீரில் போட்டு எடுத்தால்... வாங்க பூரியை தண்ணீரில் எப்படி சுடுவது என்று பார்க்கலாம்...

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் உணவாக பூரி இருந்து வருகிறது. ஆனால், பூரி எண்ணெய் பலகாரம் என்பதற்காக பெரியவர்கள் அடிக்கடி சாப்பிடமாட்டார்கள், செரிமான பிரச்சனை மற்றும் உடலுக்கு பல்வேறு கெடுதல்கள் ஏற்படுத்தும் என்பதால் குழந்தகளைகளுக்கும் அடிக்கடி செய்து தர இயலாது.

இனி அந்த பிரச்சனை இல்லை. பூரியை அடிக்கடி சாப்பிடலாம், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் எந்த பிரச்சனையும் வராது. எப்படி என்று கேட்கிறீர்களா? பூரியை எண்ணெயில் போட்டு எடுத்தால் தானே பிரச்சனை, தண்ணீரில் போட்டு எடுத்தால்... வாங்க பூரியை தண்ணீரில் எப்படி சுடுவது என்று பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்

கோதுமை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவை தேவையான அளவு எடுத்து தண்ணீர், எண்ணெய் ஊற்றி பூரிக்கு ஏற்றார் போல் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிசைந்து வைத்த மாவை, எண்ணெய் அல்லது மாவை தொட்டு உருட்டி தட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.



அதன் பின்னர், அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் கடாயை வைக்க வேண்டும். அதில் எண்ணெய்க்கு பதிலாக போதிய அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

தண்ணீர் கொதி நிலையை அடைந்த பிறகு வழக்கம் போல் பூரியை போட்டு எடுக்க வேண்டும். எண்ணெயில் போட்டு எடுப்பது போன்றே தண்ணீரிலு் போட்டு எடுக்க வேண்டும்.



பூரியை சுட்டு எடுத்ததும் இன்னொரு பெரிய தட்டில் அல்லது பெரிய பாத்திரத்தில் மாற்றி எடுத்துக்கொள்ளவும். சிறிது நேரம் சூடு ஆறியவுடன் பூரி நன்றாக உப்பி சாப்பிட மிருதுவாக இருக்கும்.

எண்ணெயில் சுட்டு எடுத்த பூரியை சாப்பிடும் பலருக்கு செரிமான பிரச்சனை, மற்றும் பல உடல் உபாதைகள் ஏற்படும். அதனால் பூரி வெகுவாக சாப்பிட மறுப்பர். இனிமேல் அந்த கவலை இல்லை!. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். திகட்டவும் செய்யாது. ஒருமுறை பூரியை தண்ணீரில் சுட்டு சாப்பிட்டு பாருங்கள். அதன் ருசியை மறக்கவே மாட்டீர்கள்.

குழந்தைகளுக்கு பிடித்த ''ரஷ்யன் சாலட்'' செய்வது எப்படி?
 

click me!