அதிக ஊட்டச்சத்து கொண்ட ரஷியன் சாலட்டை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்,
இந்த ரஷ்யன் சாலட், குழந்தைகளுக்கும் பிடித்தமானதும், மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். இந்த சாலட் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது என்பதால் நீங்கள் இதை எந்த நேரத்திலும் சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் அளிக்கலாம். இதன் எளிமையான செய்முறையை இப்பொது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேவையான அளவு கட்டி தயிர்
ஒரு கப் நறுக்கிய அன்னாசி பழம்
அரை கப் மாதுளை
கால் கப் நறுக்கிய பச்சை பீன்
கால் கப் நறுக்கிய கேரட்
ஒரு கப் பண்ணை உருளைக்கிழங்கு
கால் கப் தேவையான அளவு உறைந்த இனிப்பு சோளம்
மயோனைஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் முதலில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, இனிப்பு சோளம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கிளரவும். பின்னர், கடாயை எடுத்து அதில் அந்த காய்கறி மற்றும் ஒரு தேவையான அளவு உப்பு சேர்த்து 5-10 நிமிடங்கள் காய்கறிகள் மென்மையாக வேகும் வரை வரை சமைக்கவும்.
Palak Keerai Puri: இரும்புச்சத்து நிறைந்த வித்தியாசமான பாலக்கீரை பூரி..இப்படி சுலபமாக ஒருமுறை செய்து பாருங்க..
வேகவைத்த காய்கறிகள் ஆறியதும், காய்கறிகளை வடிகட்டவும். வடிகட்டிய நீர் சத்தானது என்பதால் நீங்கள் இதை சப்பாத்தி மாவை பிசையவும் பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய காய்கறிகளை மாற்றி, அவை ஆறியதும், அதில் கட்டி தயிர் மற்றும் மயோனீஸ் சேர்த்து நன்றாக கலக்கவ வேண்டும்.
பிறகு அதில் மாதுளை மற்றும் அன்னாசிப்பழம் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.அதோடு உங்கள் ரஷ்யன் சாலட் ரெடி!
பரிமாறும் முன் அதில் உப்பு, சர்க்கரை மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை லேசாக தூவி கிளறி பரிமாறவும்.