Christmas Cake and desserts Recipes : கிறிஸ்துமஸுக்கு தயாரிக்கப்படும் விசேஷமான கேக்- தெரியுமா உங்களுக்கு..?

By Dinesh TGFirst Published Dec 20, 2022, 4:35 PM IST
Highlights

முன்பெல்லாம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் வெட்டும் பழக்கம் இருந்தது கிடையாது. அப்போது எல்லாம் பழங்கள் தான் பெரும்பாலும் முக்கிய உணவாக கருதப்பட்டன. தற்போது அந்த பழங்கள் உலர் பழங்களாக செய்யப்பட்ட சுவையான கேக்குகளாக மாறியுள்ளன.
 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று கடவுள் இயேசுவை வழிபடுகின்றனர். குறிப்பாக இந்நாளில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், பரிசுகள் வழங்குதல், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய பாடல்களைப் பாடுதல், விருந்து பரிமாறுதல் போன்றவை சிறப்பு நிகழ்வுகளாக இருக்கின்றன. இவை தவிர கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் தந்தை போன்ற கதாபாத்திரங்கள் குழந்தைகளுடன் விளையாடுவதையும் பாடும் நிகழ்வுகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பு நிகழ்வுகளாக உள்ளன. அப்போது சாக்லேட் மற்றும் பரிசுகளை கிறிஸ்துமஸ் தாத்தா வழங்குவார். 

தொழில் புரட்சிக்கு முன், கிறிஸ்துமஸ் 12 நாட்கள் கொண்டாடப்பட்டது. ஆனால் இப்போது அப்படியில்லை. தற்போதைய காலக்கட்டத்தில் கிறிஸ்துமஸ் ஒரு வாரம் மட்டுமே கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த பண்டிகையின் கடைசி நாளில் சுவையான பழ கேக் சாப்பிடப்படுகிறது. இது கிறிஸ்துமஸ் பண்டிகையின் சமீபத்திய பாரம்பரியமாக உள்ளது. இப்போது கிறிஸ்துமஸ் கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறைவடைவது கிடையாது.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வீட்டில்லேயே செய்து கொண்டாடலாம் வாங்க!

கேக் என்பது ஆங்கிலேயர்களின் மரபாக இருந்தாலும், உலகளவில் பலரும் விரும்பக் கூடிய இனிப்பு உணவாக உள்ளது. பொதுவாக ஃப்ரூட் கேக் என்பது உலர் திராட்சை, ரம் மற்றும் மைதா கொண்டு செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸுக்கு கேக் வெட்டும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் வந்தது. அந்தக் காலத்தில் கிறிஸ்துமஸுக்கு காய்கறிகள் மற்றும் ரொட்டிகள் மட்டுமே சமைத்து வந்தனர். அதற்கு பிளம் புட்டிங் என்று பெயர்.

தற்போது பலரும் கேக் தயாரிக்க மைதா மாவை பயன்படுத்துகின்றனர். முன்னதாக மைதாவுக்கு பதிலாக கோதுமை சேர்த்து, முட்டை, வெண்ணெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட கேக் தயாரிக்கப்பட்டது. சில பணக்கார குடும்பங்கள் ஈஸ்டர் கேக்கிற்கு மார்சிபான் எனப்படும் பாதாம் சர்க்கரை பேஸ்ட்டை பயன்படுத்தியுள்ளனர். மற்ற கேக் போல் இல்லாமல் கிறிஸ்துமஸ் கேக் என்பது தனித்துவம் கொண்டது. மேலும் ஆரோக்கியம் நிறைந்தது. 

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் "பிளம் கேக் " வீட்டிலிலேயே செய்யலாம் வாங்க!

ஏனெனில் இந்த கேக்குகள் பெரும்பாலும் உலர் பழங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறப்பு நாளுக்காக பிளம் கேக்குகள் பெரும்பாலும் வாங்கப்படுகின்றன. இந்த கேக்குகளில் திராட்சை சேர்க்கப்படுகிறது. அதனால் கேக் நீண்ட நாட்கள் வரும். அதனால் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நீங்களும் ஃப்ரூட் கேக் சமைத்து சாப்பிட்டு பாருங்கள்.

click me!