சமீப காலமாக உடல் எடை அதிகரிப்பால் பலரும் அவதி அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உடல் எடையை குறைக்க முடிவு செய்து, அதை மறந்துவிடும் பழக்கம் பலரிடையே நிலவுகிறது. அந்த வகையில் வரும் புத்தாண்டுக்கு உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
நடப்பாண்டு 2022 முடிந்து 2023-ம் ஆண்டு துவங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. வரும் புத்தாண்டையொட்டி பலரும் பலவிதமான கனவுகளுடன் எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் உடல் பருமானால் அவதி அடைந்து, அதை குறைக்க முயற்சிப்பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு புத்தாண்டு என்பது எதிர்காலம் சார்ந்த திட்டமிடலை வழங்கக்கூடியதாக உள்ளது.
புத்தாண்டு நேரத்தில் உடல் எடையை குறைப்பதற்கான உறுதி எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அதை அவர்கள் சரியாக நடைமுறை செய்கின்றனரா? என்பது கேள்வி தான். எனினும், அப்படி உறுதி எடுப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.
எடை இழப்புக்காக பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு பானம் தொப்பை கொழுப்பை விரைவில் குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இது தொப்பையை கரைத்து இடுப்பை மெலிதாக மாற்றிவிடும். சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பானம் கொழுப்பை குறைப்பதற்கான முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைச் செய்ய, உங்களுக்கு 40 கிராம் சியா விதைகள் மற்றும் 1 லிட்டர் தண்ணீர் தேவை. அதன் சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாற்றையும் பயன்படுத்தலாம்.
எல்லாவற்றையும் கலக்கி வைத்து குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இதில் சியா விதைகள் ஊறினால் மேலும் ஊட்டச்சத்து அதிகரிக்கும். இந்த எடையைக் குறைக்கும் பானத்தை காலையில் குடிப்பது மிகவும் நன்மை தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சியா விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்வீர்கள்.
நீங்கள் குறைவான கலோரிகளை சாப்பிடும்போது, உடல் கலோரி பற்றாக்குறைக்கு செல்கிறது. இது அடிவயிற்றில் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் சேமிக்கப்படும் கொழுப்பை எரிப்பதன் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. எனினும் கலோரிகளுக்கு கூடுதலாக, நீங்கள் புரதம், வைட்டமின்கள் அல்லது பிற தாதுக்களை குறைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து பானம் தயாரித்து உட்கொள்ள வேண்டியது கிடையாது. மேலும், இதை ஸ்மூத்திகள், சாலடுகள், தயிர் வகைகள், சூப்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம். சியா விதைகளை எடை குறைக்கும் உணவில் சேர்ப்பது மிகவும் எளிதானது மற்றும் பயனுள்ளது.