குளிர்காலத்தில் சோர்வாக இருக்கிறதா? இந்த 5 உணவுகளை சாப்பிட்டு பாருங்க !!

By Raghupati RFirst Published Dec 14, 2022, 7:58 PM IST
Highlights

குளிர்காலத்தில் பொதுவாக பலருக்கும் சோம்பல் அதிகமாக இருக்கலாம். இத்தகைய குளிர்காலத்தில் உங்கள் எனர்ஜியை அதிகரிக்கும் 5 அட்டகாசமான உணவுகளை இங்கு பார்க்கலாம்.

வாழைப்பழங்கள்

நாள் முழுவதும் எனர்ஜியாக இருக்க சூப்பரான உணவுகளில் வாழைப்பழம் தான். சர்க்கரையின் மூல ஆதாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நார்சத்தும் அதிகமுள்ளது. உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும். நீங்கள் அதை அப்படியே உட்கொள்ளலாம் அல்லது மில்க் ஷேக்கில் கலந்தும் சாப்பிடலாம்.

நட்ஸ்

புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்கள் பாதாம், அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை போன்றவை உள்ளது. பாதாம் மற்றும் பிஸ்தாக்களில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. இவைகளை தேவைப்படும் போதெல்லாம் அவற்றை சாப்பிட எளிதானதும் கூட.

பீட்ரூட்டை இப்படி சாப்பிட்டீங்கன்னா கை மேல் பலன் கிடைக்கும்..!!

முட்டை

புரதம் மற்றும் தேவையான அமினோ அமிலங்கள் முட்டையில் ஏராளமாக உள்ளன. இவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, நாள் முழுவதும் எனர்ஜியாக இருக்கலாம். நோயெதிர்ப்பு சக்திக்கு முக்கியமானதாக பார்க்கக்கூடிய வைட்டமின்கள் ஏ, பி12 மற்றும் செலினியம் ஆகியவை முட்டையில் உள்ளது.

ஆப்பிள்

ஆப்பிள்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து மட்டுமல்லாமல், குர்செடின், கேடசின், ஃப்ளோரிட்ஜின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆப்பிள் பல்வேறு நோய்களைப் பாதுகாக்கிறது.

சோயாபீன்ஸ்

புரதம், பி வைட்டமின்கள், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் அனைத்தும் சோயாபீன்களில் ஏராளமாக உள்ளது. சோயாபீன்ஸ்கள் பல்வேறு வடிவங்களில் இருப்பதால், எளிதாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.

நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள “ஹெர்பல் சூப் “

click me!