ஒரு நாள் மட்டும் செஞ்சா போதாது... தினமும் செய்யணும்...!

First Published May 4, 2018, 3:30 PM IST
Highlights
daily we have to maintain our skin


கத்திரி வெயில் தொடங்கி உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்

மேலும், அதிக வெயில் காரணமாக சருமம் அதிகளவில் பாதிப்பு அடைகிறது.

இதிலிருந்து விடுபட கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்து வரலாம்  

சருமத்தை பாதுகாக்க தினமும் செய்ய வேண்டியவை

பப்பாளிக் கூழ் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும் கலந்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிட ங்கள் கழித்துக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவு பெறும்.

கொத்தமல்லித் தழையையும், புதினாவையும் சம அளவு எடுத்து அரைத்து, எலுமிச்சை கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் வழிகிற சருமம் அழகு பெறுவதுடன், மன அழுத்தமும் சரியாகும்.

பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருவளையங்கள் மறையும்.

பாதாமும், ஓட்ஸும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவிக் கழுவினால், சருமம் பளபளப்பு பெறும்.

நெல்லிக்காயை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும்.

தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பருக்கள் வராமல் தவிர்க்கலாம்.

click me!