
மத்திய கடல் ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மெரீனா கடற்கரையில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது
சென்னை கடல் நீரில் உள்ள மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இந்த ஆய்வில் சென்னையில் உள்ள 5 கடற்கரையில் உள்ள மொத்தம் 192 மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய ஐந்து பகுதிகளில் இருந்து கோடை மற்றும் மழைக் காலங்களில் உள்ள நீரின் மாதிரிகள் சேகரித்து, விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிக பாக்டீரியா கலந்த மெரீனா கடல் நீர்
ஆய்வு மேற்கொண்டதில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் மெரீனா கடல் நீரில் உள்ளதாக தெரிய வந்துள்ளது
இதற்கு காரணம், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வழியாக செல்லும் கழிவு நீர் தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் பாக்டீரியாக்கள் அதிகரித்து , கடல் நீர் மாசு அடைந்து உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது
மெரீனா பீச்சில் குளிப்பதால் வரும் நோய்கள்
செரிமான பிரச்னை, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறதாம்
அதே வேளையில், சென்னையை பொறுத்தவரை கோவளம் பீச் குறைந்த மாசு கலந்ததாக உள்ளதாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.