சாதாரண காய்ச்சலா? மலேரியா, டெங்கு, டைபாய்டா? எப்படி கண்டறிவது?

By Ramya s  |  First Published Jul 18, 2023, 7:53 AM IST

பொதுவான காய்ச்சல் மற்றும் மலேரியா, டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற குறிப்பிட்ட நோய்களை வேறுபடுத்துவது சவாலான ஒன்று


மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பொதுவான காய்ச்சல் மற்றும் மலேரியா, டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற குறிப்பிட்ட நோய்களை வேறுபடுத்துவது சவாலான ஒன்று. ஏனெனில் அவற்றின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக உள்ளன. இருப்பினும், பொதுவான காய்ச்சலிலிருந்து இந்த நோய்களைக் கண்டறிய உதவும் சில அறிகுறிகளும் உள்ளன. இந்த சூழலில் அப்போலோ மருத்துவமனையின் பொது மருத்துவ ஆலோசகர் பாரத் அகர்வால், மூன்று வெவ்வேறு நோய்களைக் கண்டறிய உதவும் அறிகுறிகளை வழங்கி உள்ளார்.

மலேரியா:

Latest Videos

undefined

காய்ச்சல்: மலேரியா பொதுவாக ஒவ்வொரு 48 முதல் 72 மணி நேரம் வரை அதிக காய்ச்சலை ஏற்படுத்துகிறது. குளிர் காய்ச்சல் மற்றும் வியர்வை இருக்கலாம். தலைவலி, சோர்வு, தசைவலி மற்றும் குமட்டல் போன்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மலேரியா இருக்கலாம். பெரும்பாலும் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் கடுமையான நடுங்கும் குளிர் காய்ச்சலும் மலேரியா இருக்கும்.

நடைபயிற்சி மேற்கொள்வதால் மட்டும் தொப்பையை குறைக்க முடியுமா? நிபுணர்கள் விளக்கம்.

டெங்கு:

டெங்கு காய்ச்சலானது திடீரென ஏற்படும் அதிக காய்ச்சலால் வகைப்படுத்தப்படுகிறது, பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். டெங்கு கடுமையான தலைவலியை ஏற்படுத்தும், பொதுவாக கண்களுக்குப் பின்னால் வலிய உணரலாம். டெங்கு அடிக்கடி கடுமையான மூட்டு மற்றும் தசை வலிக்கு வழிவகுக்கிறது. எனவே டெங்கு காய்ச்சல் "எலும்பு முறிவு காய்ச்சல்" என்றும் அழைக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தொடங்கிய 2 முதல் 5 நாட்களுக்குப் பிறகு தோன்றும் சொறி ஏற்படலாம். சொறி பொதுவாக கைகால்களில் தொடங்கி மற்ற உடல் பகுதிகளிலும் பரவுகிறது.

டைபாய்டு: டைபாய்டு காய்ச்சல் 38°C (100.4°F) இலிருந்து 40°C (104°F) வரையிலான நிலையான மற்றும் நீடித்த காய்ச்சலுடன் தொடர்புடையது. பலவீனம் மற்றும் சோர்வு, பசியின்மை மற்றும் எடை இழப்பு ஆகிய அறிகுறிகளுடன் டைபாய்டு காய்ச்சல் ஏற்படலாம். வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை டைபாய்டு நிகழ்வுகளில் இருக்கலாம். டைபாய்டு காய்ச்சலின் மற்றொரு அம்சம் வயிறு மற்றும் மார்பில் ரோஜா நிற புள்ளிகள் ஏற்படுவதாகும்

 

ஏன் இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது நல்லது? இத்தனை நன்மைகள் இருக்கா?

click me!