
பொதுவாக 18 வயதிற்குப் பிறகு உயரமாக நம்மால் வளரமுடியாமா? என்ற கேள்வி மக்கள் மனதில் அடிக்கடி எழ துவங்கும். ஆனால் ஒரு நபரின் உயரத்தை தீர்மானிப்பதில் "மரபியல்" ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைஏ ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களுடைய உயரத்தை அதிகரிக்க உதவும் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அதே நேரம் இயற்கையாகவே சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு, ஒரு மனிதனின் வளர்ச்சி என்பது பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கௌசாம்பியில் உள்ள யசோதா மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணர் தான் டாக்டர் ராகுல் சௌரா. அவர் பேசுகையில், சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, 18 வயதிற்குப் பிறகும் எலும்புகள் மற்றும் உடல் அமைப்பில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்கிறார். "18 ஆண்டுகளுக்குப் பிறகு உயரத்தில் பெரிய மாற்றங்கள் அரிதாகவே காணப்படுகின்றன என்றாலும், கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்த சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சியுடன், உங்கள் உடல் அமைப்பு, உடல் வலிமை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்".
விராட்டுடன் "அந்த" டாப் தமிழ் நடிகை Selfie - வைரல் போட்டோவில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?
"இது உங்கள் உடலில் சிறிது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் குறிப்பாக உயரத்தில். மேலும், குழந்தை பருவத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்”, என்று டாக்டர் சௌரா தனது அந்த உரையில் கூறினார்.
பால் ரக்ஷா, பாரத் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேலாளர் தன்வி சவுகான் கூறுகையில், “இளமை பருவத்தில் ஒருவரின் உயரம் சராசரியை விட குறைவாக இருந்தால், அவர்களின் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும். சரியான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வது முழு உயரத்தை அடையவும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
“தசைகள் உருவாவதிலும், எலும்புகளின் வளர்ச்சியிலும் புரதம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பருப்புகள் மற்றும் சோயா பொருட்களில் நல்ல அளவு புரதம் உள்ளது. முட்டை, கோழி, மீன் போன்றவற்றிலும் புரதம் கிடைக்கிறது. போதுமான அளவு புரதம் மற்றும் கால்சியம் உட்கொள்வது சரியான உயரத்தை அடைய உதவும்,” என்று சவுகான் மேலும் கூறினார்.
உயரத்தை அதிகரிக்க தேவையான சத்துக்கள்
கால்சியம் - எலும்புகளை வலுப்படுத்தவும் உயரத்தை பராமரிக்கவும் கால்சியம் அவசியம். பால், பச்சை இலைக் காய்கறிகள் கால்சியத்தின் முக்கிய ஆதாரங்கள்.
வைட்டமின் டி - உங்கள் உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது, இது எலும்புகளை வலிமையாக்குகிறது. சூரிய ஒளி, மீன், முட்டை மற்றும் தானியங்கள் தான் அதன் முக்கிய ஆதாரங்கள்.
புரதம் - இது தசை வளர்ச்சி மற்றும் திசு சரிசெய்தலுக்கு அவசியம். இறைச்சி, பீன்ஸ் மற்றும் பருப்புகளில் புரதம் நிறைந்துள்ளது, இது உங்கள் உயரத்தை மேம்படுத்த உதவும்.
துத்தநாகம் - ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மற்றும் உயரத்தை அதிகரிக்க உதவுவது துத்தநாகம். பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் துத்தநாகத்தின் நல்ல ஆதாரங்கள்.
விஜய் டிவி ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகிய நடிகை! இனி அவருக்கு பதில் இவர் தான்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.