சர்க்கரை நோய்க்கு சிறந்தது ஒட்டகப் பால்.. நிபுணர்கள் சொல்லும் மொத்த நன்மைகள் பற்றி தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

By Ma Riya  |  First Published Feb 24, 2023, 12:18 PM IST

சர்க்கரை நோயாளிகள் பால் அருந்தக் கூடாது என ஒருபுறம் கூறப்பட்டாலும், ஒட்டகப் பால் பல நன்மைகளை கொண்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 


நீரிழிவு நோயாளிகளுக்கு பல உணவுக் கட்டுப்பாடுகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் வலியுறுத்தப்படுகின்றன. இது அனைத்தும் அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு ஒட்டகப்பால் நன்மை செய்வதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். 

ஒட்டக பாலில் இம்யூனோகுளோபுலின்ஸ், லாக்டோஃபெரின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆகிறது. "இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பரவலாக அருந்தப்படும் பசும்பாலுடன் ஒப்பிடும்போது ஒட்டகப் பாலின் ஊட்டச்சத்து மதிப்பு மிகவும் ஒத்ததாக இருக்கிறது - இது கிட்டத்தட்ட அதே அளவு உள்ளது. புரதம், கால்சியம், கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவையும் கூட நிறைந்துள்ளது,” என ஜெய்ப்பூர் போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறையின் தலைவர் அன்ஷு சதுர்வேதி தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

பசும் பால் vs ஒட்டகப்பால் 

பசும் பாலுக்கும் ஒட்டகப்பாலுக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஒட்டகப் பாலில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். பசும் பாலில் உள்ள லாக்டோஸ், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு காரணமாகும். எனவே, டைப் 1 மற்றும் 2 நீரிழிவு நோயாளிகள் ஒட்டகப் பால் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என பல ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. 

ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லி ஒட்டகப் பாலை அருந்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஒட்டகப்பாலை பச்சையாக அருந்துவதே நல்லது. இதை கொதிக்க வைப்பது பாலின் நன்மையை குறைக்கலாம். ஒட்டகப் பாலில் வைட்டமின் பி, சி சத்துக்களை நிறையக் கொண்டது. இது, பசுப் பாலில் இருப்பதைவிட 10 மடங்கு அதிகமாக இரும்புச் சத்து உள்ளதாக ஐ.நா. சபை கூட அறிவித்தது. 

சர்க்கரை நோய்க்கு சிறந்த ஒட்டகப் பால்

தினமும் இரண்டு கப் (500 மில்லி) ஒட்டகப் பாலை எடுத்துக் கொள்ளத் தொடங்கினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மேம்படுவதை காணலாம். ஆனால் உடற்பயிற்சி, உணவு முறையில் மருத்துவர்களின் ஆலோசனை பின்பற்றவேண்டும். ஒட்டகப் பால், பசுவின் பாலை விட கணிசமாக விலை அதிகம். 200 கிராம் ஒட்டகப் பால் பவுடர் ரூ. 700. தினமும் இதை அனைவரும் சாப்பிடுவது சாத்தியமில்லை. ஒட்டகம் 13 மாதங்கள் நீடிக்கும் கர்ப்பத்திற்குப் பிறகுதான் பால் கொடுக்க முடியும். அதனால் தேவைக்கு ஏற்படி விலை அதிகமாக உள்ளது. 

இதையும் படிங்க: கைக்குழந்தை ஏங்கி ஏங்கி அழுகிறதா? ரொம்ப நேரம் அழுகையை நிறுத்தலன்னா இதுதான் காரணம்.. என்ன செய்யணும் தெரியுமா?

பசும் பாலில் ஒவ்வாமை இருப்பவர்கள் ஒட்டகப்பாலை அருந்தும் முன் கவனமாக இருக்க வேண்டும். முதலில் முயற்சி செய்து உடலுக்கு ஒத்துக் கொண்டால் அருந்தலாம். பச்சையாக ஒட்டகப்பாலை அருந்துவது நல்லதென்றாலும் சிலருக்கு உடல் ஏற்று கொள்ளாது அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பிணி, பாலூட்டும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பச்சையாக ஒட்டகப்பால் அருந்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒட்டகப்பால் பவுடர் வாங்கி பயன்படுத்த நினைப்பவர்கள் மருத்துவரை ஆலோசனை செய்வதும் நல்லது. 

இதையும் படிங்க: கடினமான போர்வையை தண்ணீர் பயன்படுத்தாமல் துவைக்க செம்ம ஐடியா.. கையும் வலிக்காது, ஒரு கிருமி கூட இருக்காது..

click me!