வறண்ட சருமமா? முக அழகை மெருகூட்டும் பெஸ்ட் 4 ஸ்க்ரப்.. கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

By Kalai Selvi  |  First Published Jul 12, 2024, 12:42 PM IST

Face Scrub For Dry Skin : வறண்ட சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஃபேஸ் ஸ்க்ரப் பயன்படுத்த வேண்டும். எனவே, வறண்ட சருமத்திற்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு ஃபேஸ் ஸ்க்ரப்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.


வறண்ட சரும பிரச்சனை உள்ளவர்கள் தங்களது சருமத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதனால் அவர்கள் அடிக்கடி சருமத்தை ஈரப்பதமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், இதற்காக மாய்ஸ்ரைசரை அதிகமாக பயன்படுத்தினால் சருமத்தில் இறந்த செல்கள் குவிந்து விடும். இதற்காக நீங்கள் ஃபேஸ் ஸ்க்ரப்பிங்கை முயற்சி செய்யலாம். 

உண்மையில், வறண்ட சருமத்திற்கு சந்தையில் பல வகையான ஸ்க்ரப்கள் கிடைக்கின்றது. ஆனால், அவற்றில் இரசாயனங்கள் உள்ளதால், அவற்றினால், தோல் மிகவும் வறண்டு உயிரற்றதாக மாறிவிடும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரப்பை பயன்படுத்தி உங்கள் வறண்ட சருமத்தை போக்கலாம். வறண்ட சருமத்திற்கு வீட்டிலேயே ஸ்க்ரப் செய்வது எப்படி என்று இப்போது நீங்கள் கேட்கலாம். உங்களுக்காக இந்த கட்டுரையில், வறண்ட சருமத்திற்கு வீட்டிலேயே 4 ஃபேஸ் ஸ்க்ரப்கள் எப்படி செய்வது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவை..

Latest Videos

undefined

வறண்ட சருமத்திற்கு 4 சிறந்த ஸ்க்ரப்கள்:

ரோஸ் மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப்:

இந்த ஸ்க்ரப் உங்கள் முகத்தில் இறந்த பொலிவை திரும்ப கொடுக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் பளபளப்பான சருமத்தை கொடுக்கும் செய்ய முதலில், ரோஜா இதழ் மற்றும் ஓட்ஸ் இரண்டையும் தனித்தனியாக நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து அந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி, நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவவும். இந்த ஸ்க்ரப் உங்கள் முகத்தில் பொலிவை தரும்.

பப்பாளி மற்றும் அன்னாச்சி பழம் ஸ்க்ரப்:

பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது தோலில் உள்ள தூசிகளை அகற்றவும், தோல் பதனிடவும் பெரிதும் உதவுகிறது. முகத்திற்கு பப்பாளி மற்றும் அன்னாச்சி பழத்தில் ஸ்க்ரப் செய்ய முதலில் இரண்டையும் சம அளவாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அவற்றை அரைத்து அந்த பேஸ்டில், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தடவி, லேசாக மசால் செய்யவும். இது உங்கள் முகத்தை பிரகாசமாக்கும்.

இதையும் படிங்க:  உங்க முகம் குழி குழியா பாக்க அசிங்கமா இருக்குதா..? அப்ப 'இந்த' ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க..

ஸ்டாபெரி ஸ்க்ரப்:

ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதற்கு எவ்வளவு சுவையாக இருக்கிறது அதே அளவுக்கு முகப்பரு உள்ளது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் ஸ்க்ரப் செய்வது ரொம்பவே ஈசி. இதை செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் ஸ்ட்ராபெரிகளை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதை முகத்தில் பயன்படுத்தவும். இந்த ஸ்க்ரப் உங்கள் முகத்தில் உள்ள பருக்களை குணமாக்கவும், முகம் கலராகவும் உதவுகிறது.

இதையும் படிங்க: Skin Care : மறந்தும் கூட உங்கள் முகத்தில் இவற்றை ஒருபோதும் அப்ளை பண்ணாதீங்க..!

ஓட்ஸ் தேங்காய் மற்றும் பால் ஸ்க்ரப்:

தேங்காய் மற்றும் பால் இரண்டும் சருமத்திற்கு ரொம்பவே நல்லது. இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றுவதோடு மட்டுமின்றி, சருமத்தை ஈரப்பதமாக்கவும் பெரிதும் உதவுகிறது. இந்த ஸ்க்ரப் செய்ய முதலில், ஓட்ஸ் நன்கு நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில், சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து உங்கள் முகத்தில் தடவவும். பிறகு லேசாக மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஸ்க்ரப் உங்கள் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!