உட்கார்ந்திருக்கும் போது கால் ஆட்டும் பழக்கம் உள்ளவரா? உடனே நிறுத்துங்க.. இல்லைன்னா அவ்வளவுதான்..!

Published : Jul 12, 2024, 11:23 AM ISTUpdated : Jul 12, 2024, 09:13 PM IST
உட்கார்ந்திருக்கும் போது கால் ஆட்டும் பழக்கம் உள்ளவரா? உடனே நிறுத்துங்க.. இல்லைன்னா அவ்வளவுதான்..!

சுருக்கம்

Leg Shaking Habit While Sitting : இந்த கட்டுரையில் உட்கார்ந்து இருக்கும்போது கால் ஆட்டுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் பாதிப்புகள் என்ன என்பதை குறித்து அறிந்து கொள்ளலாம்.

பலர் உட்கார்ந்து வேலை செய்யும்போது, படிக்கும்போது அல்லது டிவி பார்க்கும்போது தங்களது கால்களை ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இப்படி கால்களை ஆட்டுவதைப் பார்த்தால் திட்டுவார்கள். உண்மையில், உட்காந்திருக்கும்போது கால்களை ஆட்டுவது ஒரு கெட்ட பழக்கமாக கருதப்படுகிறது. கால்களை ஆட்டுவது ஒரு சாதாரண பழக்கமாக இருக்கலாம். ஆனால், சில சந்தர்ப்பங்களில் இது உடலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா..?

உண்மையில், நம்முடைய உடலானது ஒரு எப்போதும் செயல்பாட்டில் இருந்து கொண்டே இருக்கும். நாம் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் கூட நம்முடைய தசைகள் மற்றும் நரம்புகள் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கும். இதனால் ரத்த ஓட்டத்தை பராமரிக்கவும், தசை அசைவுகளை பராமரிக்கவும் நமது உடலை சமநிலையில் வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது. 

உங்களுக்கு தெரியுமா... நாம் உட்கார்ந்து இருக்கும்போது கால் ஆட்டுவது ஒரு தொடர்ச்சியான செயல்பாட்டின் வெளிப்பாடாகும். இப்படி செய்தால் உடலில் பல காரணிகள் தூண்டப்படுமாம். எனவே, இந்த கட்டுரையில் உட்கார்ந்து இருக்கும்போது கால் ஆட்டுவதற்கான காரணங்கள் என்ன என்பதை குறித்து அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:   சர்க்கரை நோயாளிகள் பால் டீ அருந்தலாமா? எப்போது குடித்தால் சர்க்கரை அளவு நார்மலாக இருக்கும் தெரியுமா?

உட்கார்ந்து இருக்கும்போது கால் ஆட்டுவது ஏன்?:

உடல் அசெளகரியம்: நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் தசை பிடிப்பு உணர்ச்சி உள்ளது போன்ற உடல் ரீதியான அசா தெரியும் ஏற்படும். அந்தசமயம், கால் ஆட்டினால் இந்த உணர்வுகள் அனைத்தும் தணியும். மேலும், இப்படி செய்வதன் மூலம், இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசைகளை நீட்டி நரம்புகளை தூண்ட பெரிதும் உதவுகிறது.

மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்: ஒரு நபர் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றால் உடல் ரீதியாக பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும். உதாரணமாக, இதயத்துடிப்பு வியர்வை மற்றும் தசை பதற்றம் போன்றவையாகும். இத்தகைய சூழ்நிலையில், கால் ஆட்டினால் இந்த பதற்றத்தை குறைக்கவும், உடலை அமைதிப்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.

சலிப்பு: நாம் சில சமயங்களில் சளிப்படையும் போது, நமது மனமானது எதிலும் ஈடுபாடில்லாமல், வேறுமனே இருக்கும். எனவே இத்தகைய சூழ்நிலையில், கால் ஆட்டுவது சலிப்பை போக்குவது மட்டுமின்றி, 
நமது மனதையும் செயல்களில் ஈடுபடுத்தும்.

மருத்துவ அறிவியலில்: தேவையில்லாமல் கால்களை ஆட்டும் பழக்கம் மருத்துவ அறிவியலில், Restless Legs Syndrome .அதாவது, RLS எனப்படும் நோயாக அறியப்படுகிறது.

இதையும் படிங்க:  இந்த கெட்ட பழக்கங்கள் உங்கள் மூளையை பலவீனமாக்கும்..! இவற்றை உடனே நிறுத்துங்கள்..!

கால் ஆட்டுவதால் ஏற்படும் பின் விளைவுகள்: 

  • நீங்கள் எப்போதுமே கால் ஆட்டிக்கொண்டே இருந்தால், மற்றவர்களின் கவனம் சிதறடித்து, உங்களை விட்டு விலகி செல்லும். அதுவும் நீங்கள் பிறரிடம் பேசும் போது கால் ஆட்டிக்கொண்டே பேசினால், உங்கள் மீது இருக்கும் மரியாதை குறையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதுபோல நீங்கள் அளவுக்கு அதிகமாக கால் ஆட்டிக் கொண்டே இருந்தால் கால் வலி போன்ற சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, இந்த பழக்கம் மூட்டு வலி பிரச்சனைகளுக்கு. வழிவகுக்கும். குறிப்பாக, RLS பிரச்சனை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக கால் ஆட்டினால், அதன் அறிகுறிகள் மோசைமடைய வாய்ப்பு உள்ளது.
  • மேலும் நீங்கள் வேலை பார்க்கும் இடம் அல்லது பொது இடங்களில் கால் ஆட்டினால், உங்களது தொழில் சார்ந்த விஷயங்கள் பாதிப்படையும். எனவே, இந்த பழக்கத்தை உடனே நிறுத்தி விடுங்கள். மேலும் உங்களது கவனத்தை திசை திருப்ப நீங்கள் புத்தகம் படிப்பது, பாட்டு கேட்பது அல்லது வேறு ஏதேனும் விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.
  • நீங்கள் கால் ஆட்டுவதை நிறுத்த விரும்பினால் கால் ஆட்டுவதற்கு பதிலாக, ஏதாவது ஒரு மேஜை மீது உங்கள் கால்களை தூக்கி வையுங்கள். அதுபோல உங்கள் கால்களில் வலி அசெளகரியம் ஏதேனும் ஏற்பட்டால் சிறிது தூரம் நடப்பது நல்லது. இதனால் உங்கள் இரத்த ஓட்டம் மேம்படும் மற்றும் கால்களில் உள்ள வழியும் குறையும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க