Benching Relationship : தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பெஞ்சிங் ரிலேஷன்ஷிப் மோகத்திற்கான காரணம் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அந்த காலத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் சம்மதத்துடன் தான், ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால், காலப்போக்கில் காலங்கள் மாறும் போது உறவுகளின் அர்த்தமும் மாறுகிறது தெரியுமா.. எப்படியெனில், இன்று ஆண் பெண் என இருவர் சந்திப்பது உறவினர்களால் அல்ல, 'டேட்டிங்' என்ற ஆப் மூலம்தான்.
ஆம், இந்த ஒரு ஆப் மூலம் தான் ஒரு உறவே உருவாகிறது. இன்று ஒரு நபர் ஒரு உறவில் இருந்தால், அது பிடிக்கவில்லை என்றால், நாளை அவர் வேறு ஒருவருடன் உறவில் இருப்பார். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகமாக முன்னேற்றம் அடைகிறதோ, அதே வேகத்தில் உறவுகளின் அர்த்தமும் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்த காலத்து ஆண் மற்றும் பெண்கள் பல வகையான ரிலேஷன்ஷிப்பை கண்டுபிடித்து, அதன்படி வாழ்கின்றனர்.
அவற்றில் ஒன்றுதான் பெஞ்சிங் ரிலேஷன்ஷிப். இந்த ரிலேஷன்ஷிப் இந்த காலத்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த ரிலேஷன்ஷிப் என்றால் என்ன? அதன் பயன்பாடு ஏன் அதிகரித்துள்ளது போன்ற விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
பெஞ்சிங் ரிலேஷன்ஷிப் என்றால் என்ன?
பெஞ்சிங் ரிலேஷன்ஷிப் என்பது காத்திருக்கும் பட்டியலில் இருக்கும் ஒரு டேட்டிங் போல. அதாவது, ஒரு நபர் மற்றொரு நபருடன் உறவில் இருக்கும்போது அந்த உறவு பிடிக்கவில்லை என்றால், அவரை பிரேக் அப் செய்துவிட்டு வேறு ஒரு நபருடன் இருக்கலாம் என்ற ஒரு காத்திருப்பு பட்டியலை தயார் செய்து வைத்திருப்பது பெஞ்சின் ரிலேஷன்ஷிப் ஆகும்.
இன்னும் சொல்லப்போனால், ஒரு நபர் ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கும் போது, மற்றொரு நபருடன் தாராளமாக பேசலாம், நட்புறவில் இருக்கலாம். இந்த உறவில் தற்போதைய காதலன் அல்லது காதலி ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்த பெஞ்சிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இரு நபர்களுக்கும் தங்களுக்கும் செட் ஆகவில்லை என்றால், அவர்கள் எவ்வித தடையுமின்றி பிரிந்து செல்லலம். மேலும், அடுத்த நபருடன் அவர்கள் காதல் உறவில் ஈடுபடலாம்.
எல்லா உரிமைகளும் உண்டு:
காதல் காதலியை போலவே, இந்த ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இருவரும் ஒருவர் மீது மற்றொருவருக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு. அதே சமயம், ஒருவர் மற்றவரது விருப்பங்களை ஏற்பது மற்றும் மறுப்பதிலும் முழு சுதந்திரம் உண்டு.
பெஞ்சிங் ரிலேஷன்ஷிப் மீது இளைஞர்களுக்கு மோகம் ஏன்?
இளைஞர்கள் மத்தியில் இந்த பெஞ்சிங் ரிலேஷன்ஷிப் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் 'தனிமையின் அச்சம்' தான் என்று உளவியல் நிபுணர்கள் சொல்லுகிறார்கள்.
யார் அதிகம்?
எதிர்காலத்தை குறித்த பயம், தனிமையில் இருக்கும் அச்சம் போன்ற காரணங்களால் தான், இந்த பெஞ்சிங் ரிலேஷன்ஷிப் நோக்கி இளைஞர்கள் செல்லுகின்றனர். ஆய்வு ஒன்றில், இந்த ரிலேஷன்ஷிப்பில் அதிகம் இருப்பது ஆண்களை விட பெண்கள் தானாம்.
எப்படியெனில், பெண்களின் எதார்த்த மற்றும் பல எதிர்பார்ப்புகளினால் தான், இந்த பெஞ்சிங் ரிலேஷன்ஷிப் அவர்களது மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று ஆய்வு சொல்லுகிறது.
அதுமட்டுமின்றி, ஆண்களும் பெண்களுக்கு இணையாக, அவர்களது விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டு, மரபுகளுக்கு மீறிய உறவில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இந்த பெஞ்சிங் ரிலேஷன்ஷிப்பிலும் ஆண்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.